உச்சநீதிமன்றத்தில் இஎம்ஐ குறித்து மத்திய அரசு கடன்கள்
வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை முன்னதாக ரத்து செய்ய முடியாது. என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தன. தற்போது இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி ராஜீவ் மெஹரிஷி தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளன.
கடன்கள் விளக்கம்
இக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தன் முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யும் பிரிவுகளில் தனிநபர் கடன், தொழில் கடன், சிறு, குறு தொழில் கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றது. வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகிய கடன்கள் அடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளன.
இதே போன்று மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் சரியான தவணை செலுத்தி வந்தவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி விதிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் நீதிபதி அசோக் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன.
தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி
விசாரணைக்கு வந்த போது கொரோனா காலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட மாதாந்திர கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பது தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன.
கொரோனா பொது முடக்க காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணை மீதான வட்டிக்கு வட்டி விதிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளன. இஎம்ஐ-ன் வட்டிக்கு வட்டி குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.