மத்திய அரசு ஊரடங்கு 5 கட்டம் தளர்வு!
அக்டோபர் 15 முதல் இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்குதளர்வை பின்பற்ற வேண்டியது குறித்து மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு இருந்தது. ஜூலை ஆகஸ்ட் மாதம் வரை மிகப்பெரிய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஐந்தாம் கட்ட தளர்வு
சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்வை அமல்படுத்த இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊரடங்கும் ஐந்தாம் கட்ட தளர்வுகள் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மத்திய அரசு அறிவித்து இருக்கின்ற ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடர்பில் 50 சதவீத இறக்கைகளுடன் தியேட்டர்கள், மால்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
மாநில அரசுகளின் முடிவுகள்
அக்டோபர் 15 பின்பு பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது. அதே நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு பெற்றோர்களின் சம்மதம் அவசியம் என்பதை மத்திய அரசு உறுதிபட தெரிவித்திருக்கின்றது.
பொது இடங்கள் திறக்கப்படுதல்
இந்தியாவில் நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதிவரை ஐந்தாம் கட்ட தளர்வுடன் பொதுமுடக்கமானது நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்து இருக்கின்றது.
முகமூடி அணிதல் சுகாதாரம் பேணுதல்:
பொதுமக்கள் வெளியில் எங்குச் சென்று வந்தாலும் முகமூடி அணிந்து கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். சமூக இடைவெளி என்பதை பின்பற்ற வேண்டும். பொது இடத்தில் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பொது இடங்களில் மக்கள் முழுமையாகச் சுகாதார விதிமுறைகள் கடைபிடிப்பதில்லை என்ற தகவல்களும் கிடைக்கின்றன.
பண்டிகை காலங்களில் சமூக இடைவெளி
மழைக்காலம் மற்றும் பண்டிகை காலங்கள் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது இந்த நேரத்தில் தேவைப்படும் பொருட்களைக் குறைந்தளவில் மட்டும் கூட்ட நெரிசல் இல்லாதபோது வாங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு வெளியில் எங்குச் சென்று வந்தாலும் பொது இடங்களில் எச்சில் துப்புவது, டீக்குடித்த கப்களை வீசுவது ஆகிய மாசுபடுத்தும். நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டும்.
பொது சுகாதாரம் பாதுகாக்கும் மக்கள்
பொது இடம் என்பது அனைவருக்கும் சொந்தமானது அதில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் நாய்களை நடத்திச் செல்லும்போது அவைகளை நடைபாதை பகுதிகளில் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் பொது சுகாதாரம் அவசியமானது ஆகும். முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது இதனைப் பொதுமக்கள் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.