ஐஐடி-ல் தமிழுக்கு வாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு
எதிர்காலத்தில் அனைத்து ஐஐடி ஏன்ஐடிகளிலும் அவரவர் தாய்மொழி கலை பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. ஐஐடி பனராஸில் இந்தியில், பொறியியல் தொடங்கப்பட உள்ளன.
- ஏஐசிடிஇ, என்ஐடி, ஐஐடி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
- தாய்மொழி கலை பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
- நாடு முழுவதும் ஐஐடி மற்றும் சில என்ஐடி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளன.
ஏஐசிடிஇ, என்ஐடி, ஐஐடி, அதிகாரிகளுடன் ஆலோசனை
அனைத்து ஏஐசிடிஇ, என்ஐடி, ஐஐடி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட மெயின் தேர்வு. 2021 முதல் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் பொறியியல் படிப்பிலும் தாய் மொழி கற்றல் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஐஐடி மற்றும் சில என்ஐடி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய கல்வித்துறை அமைச்சர்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளன. பொதுத் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்மொழி பொறியியல் என்பதால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமா? என்பதை சமாளிக்கும் திட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளதா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான பதிலை பொருத்திருந்து பார்க்கலாம்.