ஆன்மிகம்

மகா சிவராத்திரி நாடெங்கும் பக்தி பெருக்குடன் சிறப்பு பொங்க கொண்டாடப்பட்டது.

விண்ணைப் பிளக்கு சிவாராத்தி கொண்டாட்டம். மக்கள் ஆராவாரம், சிறப்பு அலங்காரங்களில் சிவபெருமான். என்ன என்ன அழகு, என்று சிவபெருமானின் அலங்காரத்தை காண்போர்கள் கண்கள் விரிந்து காணப்பட்டன. 

தமிழக சிவாலயங்களில் 4  காலப்பூஜையுடன்  அபிசக ஆராதனைகளுடன் சிவன் ஆனந்த தாண்டவம் ஆடினார். பக்தர்கள் திரளாக சிவாய நம மற்றும் நமசிவாய  மந்திர உச்சாடனங்களில் அகம்  குளிர்ந்து பக்தி பெருக்கில் கோவில்களில் வழிபாடு நடத்தினார்கள். 

சிவராத்திரி   நாடு  முழுவதும் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.  ஆந்திரா, கர் நாடகாவில் அரசு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது.  சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சிவனின் அலங்காரப்பூஜையை கண்டு ரசித்து பக்தி பரவசமடைந்தனர். 

நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் பக்தி பெருக்குடன் சிவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டன.  சிவாலயங்களில் பக்தர்கள் திரளாக வந்திருந்து  பால்  அபிசேகம் செய்தனர், நாடு முழுவதுள்ள கோவில்கள் எல்லாம் நிறைந்து வழிந்தன.

சிறப்பு அழங்கார அபிசேகம்

நாட்டிலுள்ள புகழ்மிக்க கோவில்கள் மேலும் மக்கள் வெள்ளத்தில் காணப்பட்டது. சமூக வலைதளங்களில் நேரடி காட்சிகள் நான்கு காலப்பூஜைகளும் காட்டப்பட்டன. 

மேலும் ஈசாவில்  மகாசிவராத்திரி  சிறப்புடன்  ஆதி சீவனின்  பக்தி அருள் பெருக்குடன் வண்ண அலங்கார வேலைப்பாடுகளுடன் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் இணைந்து சிறப்பாக நடைபெற்றது. 

வட மாநிலங்களில் சிறப்பு அழங்கார அபிசேகம் மற்றும் இறைப்பக்தியுடன் பக்தர்கள் திரளாக   இறைவழிப்பாட்டில் ஈடுப்பட்டு சிவராத்திரி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *