செய்திகள்தமிழகம்தேசியம்

கனவு காண கற்றுக்கொடுத்த கலாம் பிறந்த தினம்!

அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் பணியாற்றினார். அவருடைய அறிவியல் ஞானமும், அவருடைய சிறந்த மனிதப் பண்பும், இளைஞர்களிடையே அவர் ஏற்படுத்திய எழுச்சியும் மக்களை பெரிதாக கவர்ந்தது.

  • திரு. அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்கு இலட்சியக் கனவு காணக் கற்றுக்கொடுத்தவர்
  • ஏவுகணை சோதனைகள் நடத்தி நாட்டை வலிமைப்படுத்த பங்கு வகித்தவர்,
  • அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத்தலைவராய் இருந்து மக்களிடையே அதிக அளவில் பேசப்பட்டவர்

விண்வெளி பொறியாளர் அப்துல்கலாம்

ஆபிஜே அப்துல் கலாம் அவர்கள் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் என்பது விளக்கமாகும். அப்துல் கலாம் அவர்கள் டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றியிருக்கின்றார். இஸ்ரோ விண்வெளி பொறியாளராக பணியாற்றி இருக்கின்றார்.

அப்துல்கலாம் விதைத்த ஆழமான விதைகள்

இந்திய ஏவுகணை நாயகன் இந்தியாவின் ஏவுகணையை உருவாக்கி தேசத்தை பாதுகாப்பாக நிறுத்திய பெருமை திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு உண்டு. அவர் இல்லை என்றாலும் அவருடைய அந்த கீர்த்தி அவருடைய அந்த அதிர்வலைகள் இன்னும் இந்த தேசத்தில் வழிநடத்திக் கொண்டுதான் இருக்கின்றது. அது இந்த தேசத்தை நேசிக்கும் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து காணப்படுகின்றது. அவர் ஆழமான விதைகளை நம்முள் விதைத்து சென்றிருக்கின்றார்.

அணு ஆயுத சோதனையில் கலாம்

1974 ஆம் ஆண்டில் முதல் அணு சோதனை பிறகு 1998 ஆம் ஆண்டு பொக்ரான் 2 அணு ஆயுத பரிசோதனை ஆகியவற்றில் அப்துல் கலாம் முக்கிய பங்காற்றினார்.

குடியரசுத்தலைவராய் எளிமை

2002 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டும் ஒன்று சேர்ந்து ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைத் தேர்வு செய்தனர். குடியரசு தலைவராக இருந்து இந்திய நாட்டு மக்களின் இதயத்தை கவர்ந்தார். ஐந்து வருடம் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த பெருமை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு உண்டு.

கலாம் அவர்களின் உழைப்பு, மாணவர்களுக்கு அவராற்றிய எழுச்சியுரை

ஐந்து வருடம் குடியரசுத்தலைவராக அப்துல் கலாம் பணியாற்றினார் அவருடைய அயராத உழைப்பு கொடுத்தார். கலாம் மாணவர்களுக்கு அவர் கொடுத்த ஊக்க எழுச்சியுரையும் என்றும் மாறாத ஒன்றாக இருக்கின்றது. அவரால் விதைக்கப்பட்ட பல நல்ல விதைகள் இந்த தேசத்தில் எழுச்சி பெற்று மக்களை பாதுகாத்து வர முயன்று வருகின்றனர்.

தன்னலமின்றி தேசத்தை வளர்ச்சியை நேசித்த கலாம்

தன்னலமற்ற எளிமையான தேசத்தை நேசிக்கும் மாபெரும் தலைவராக எளியவராக எல்லோரும் பழகுவதற்கு உரியவராகத் திரு அப்துல் கலாம் அவர்கள் திகழ்ந்தார். அவரைப் பின்பற்றி இன்னும் இந்தத் தேசத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். 2020 ஆம் ஆண்டில் இந்தத் தேசம் அடுத்ததொரு அடிவைத்து முன்னேறும் வல்லரசாகும் வல்லரசாகும் இந்திய மாறுவதை இந்த உலகம் கண்கூடு காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *