சிறுமி தற்கொலை விவகாரம்:- சிபிஐ வழக்கு பதிவு..!
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி கிறிஸ்துவ மதத்துக்கு மாற வற்புறுத்தப்பட்டதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சிறுமி தற்கொலை தொடர்பான வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு இதனை கௌவுரவ பிரச்சனையாக பார்க்கமால், சிறுமிக்கு நீதி தொடர்பாக பார்க்க வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து மத்திய புலானாய்வுத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள மிஷனரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
விடுதியில் தங்கியிருந்த அவர், கிறிஸ்துவ மதத்துக்கு மாற வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதனைதொடர்ந்து இது வெறும் வதந்தி என்றும், கந்து வட்டி பிரச்சனை காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.