அதிக பசி எடுத்தால் கண்டுக்காம விடாதீங்க
இளம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும் இதைவிட சற்று வித்தியாசமானது. குறுகிய காலத்தில் அதிக முறை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல் எடையை பற்றி கவலைப்படுவது இவர்களிடம் இருக்கவே இருக்காது.
சரியாக படுத்து உறங்க முடியாமல் கஷ்டப்படுவது. தான் சாப்பிட்டதை குறித்து வெட்கப்பட்டு துயரத்தில் ஆழ்ந்து குற்றம் செய்தது போன்ற உணர்வை வளர்த்துக் கொள்வார்கள். கட்டுப்பாட்டு எல்லையை மீறி உணவை உட்கொள்ளும். இந்த வகைக்கு உணவின் மீது கட்டுப்பாட்டை இழந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மனம் எப்போதும் உணவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். உணவை பார்க்கும் போது வாயை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு உணவின் மீதான நாட்டம் குறைந்து அதனால் உடல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். உணவு உண்பதில் அதிக கட்டுப்பாடை வைத்திருப்பார்கள். வாரத்திற்கு நான்கைந்து முறை உடல் எடையை பரிசோதித்து பார்த்துக் கொள்வார்கள். நிறைய உணவுகளை தவிர்த்து கலோரி கணக்கு வைத்து உணவு எடுத்துக் கொள்வார்கள்.
சம வயதில் உள்ளவர்களை விட உடல் வளர்ச்சி குறைவாகவே இவர்களுக்கு இருக்கும். மூளை பாதிப்பு ஒரே நேரத்தில் பல உறுப்புகள் செயலிழத்தல், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். இதயம் சம்பந்தமான பிரச்சனை, குழந்தையின்மை, நகம் மற்றும் முடி வளர்ச்சி தடைபடுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் பாதிப்புகள் இருக்கும்.
அதிகம் சாப்பிட்டதால் அதிக உடற்பயிற்சி செய்வார்கள். வலுக்கட்டாயமாக வாந்தி எடுப்பது, மலமிளக்கி களை எடுத்துக் கொள்ளுதல் போன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள். சாதாரணமாக இருப்பவரை விட இவர்களுக்கு எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
உடல் வறட்சி, தீவிர வாயுத்தொல்லை, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.