சமையல் குறிப்புவாழ்க்கை முறை

புத்துணர்ச்சி அளிக்க ஸ்பெஷல் முந்திரி கோசாம்பரி சாலட்

இந்த ரெசிப்பி நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாது. இதை எளிதாக தயாரிக்க முடியும். முந்திரி, தேங்காய் கொண்டு தயாரிக்கும் இந்த சாலட் புத்துணர்ச்சி அளிக்க கூடியது.

இதை உண்பதால் மனநிறைவு தரும். பருப்பு வகைகளில் தயாரிக்கக் கூடிய பொதுவான தென்னிந்திய சாலட் என்று கோசாம்பரி இருக்கிறது.

முந்திரி தேங்காய் வைத்து செய்யப்படும் இந்த சாலட். உங்கள் அன்புக்குரியவர்கள் உடன் சேர்ந்து அனுபவித்து உண்டு மகிழுங்கள்.

கோசம்பரி முந்திரி சாலட்

தேவையான பொருட்கள் : அரை மூடி துருவிய தேங்காய், முந்திரி பருப்பு தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் நறுக்கியது ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை 5, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய், வேர்க்கடலை ஒரு ஸ்பூன், உளுந்து பருப்பு ஒரு ஸ்பூன், பெருங்காயம் ஒரு ஸ்பூன், எண்ணெய் ஒரு ஸ்பூன்.

செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தை சூடு செய்து நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, ஒவ்வொன்றாக சேர்த்து பொரிய விடவும்.

கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் முந்திரி, தேங்காய் மற்றும் தாளித்து வைத்துள்ள கடுகு சேர்த்து, உப்பு சேர்த்து, எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விடவும்.

எல்லாம் கலந்த பிறகு கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கிளற வேண்டும். முந்திரி கோசம்பரி சாலட் தயாராகி விட்டது. வீட்டில் இருப்பவர்களுக்கு இதை மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுங்க.

புதுவிதமான சாலட் ரெசிபியை உங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழுங்கள். ஒரு முறை சாப்பிட்டால் அடிக்கடி செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *