ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு மருத்துவ ரீதியான நன்மைகள்.. கேரட் லஸ்லி

காய்கறிகளில் காரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். காரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கண்கள், இதயம், பற்கள், ஈறுகள், காயங்கள் ஆறுவதற்கு, மூளைத்திறன் மேம்படுவதற்கு, புற்றுநோயை தடுப்பதற்கும். சரும நலத்திற்கும், நீரிழிவு நோய்க்கு இப்படி பல நன்மைகளை கேரட்டில் அடங்கியுள்ளன. மேலும் கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுகின்றன.

காய்கறிகளில் காரட் நார்ச்சத்து அதிகமாக கிடைக்கிறது. காரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள் உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேரட்டை பச்சையாக உண்பது போன்று கேரட் பொரியல், கேரட் பச்சடி, கேரட் அல்வா, கேரட் லஸ்லி இப்படி வரைட்டி ஆக சமைக்கலாம்.

கேரட் லஸ்லி

தேவையான பொருட்கள் : சர்க்கரை ஒரு ஸ்பூன், தயிர் ஒரு கப், பால் கால் கப், ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்.

செய்முறை : முதலில் கேரட்டின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.

பின்னர் குக்கரை திறந்து கேரட், மிக்சியில் போட்டு பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும். இதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால் கேரட் லஸ்லி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *