சமையல் குறிப்புவாழ்க்கை முறை

கேப்ஸிகம் பன்னீர் சப்ஜி ரெசிபி

கேப்ஸிகம் பன்னீர் சப்ஜி ரெசிபி அதில் பத்து நிமிடங்களில் தயாராக வைத்தாள் 20 நிமிடங்களில் சமைத்து விடலாம். பன்னீர் துண்டுகளை மார்க்கெட்டில் வாங்கினாலும் சரி அல்லது பன்னீர் துண்டுகளாக வெட்டி வைத்து பயன்படுத்தலாம்.

குடைமிளகாயில் ரொம்ப வேக வைக்க கூடாது. அப்படி செய்வதால் தன்மையை இழந்து விடும். குடைமிளகாய் மிகவும் ரொம்ப மெல்லியதாக வெட்ட வேண்டாம்.

அடுப்பில் தீயானது இந்த செய்முறையின் போது அதிகமாக இருக்க வேண்டும். இந்த சப்ஜி ஒரு கப் பரிமாறும் போது 100 கிராம் கலோரிகளும், 8 கிராம் கொழுப்புச்சத்தும், 3 கிராம் புரோட்டின், 10 கிராம் கார்போஹைட்ரேட் 5 கிராம், நார்சத்து 3 கிராம், கொண்டுள்ளது.

கேப்சிகம் பன்னீர் சப்ஜி

தேவையான பொருட்கள் : வெங்காயம்-1, பன்னீர் துண்டுகள் ஒரு கப், கஸ்தூரி மேத்தி அலங்கரிப்பதற்காக ஒரு ஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப. தண்ணீர் ஒன்றரை கப், பூண்டு ஐந்து பல் தோல் உரித்தது, தக்காளி 2, வெங்காயம் 1, குடைமிளகாய் ஒன்று, சீரகம் அரை ஸ்பூன்,

செய்முறை விளக்கம் : குடைமிளகாயை கழுவி எடுத்து உள்ளே சுத்தம் செய்து தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை அதன் மேல் மற்றும் கீழ் பகுதியை நீக்கிவிட்டு பாதியாக வெட்டி நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பிறகு நன்றாக உதிர்த்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்த்து, தக்காளி சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கி ஆறிய பிறகு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டை விழுதாக அரைத்து வழுவழுப்பாக எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கி பிறகு குடைமிளகாய், தக்காளி ஜூஸ் இவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

கடைசியாக பன்னீர் துண்டுகளை சேர்த்து வதக்கி, கஸ்தூரி மேத்தி நன்றாக கிளறி மூடியைக் கொண்டு மூடி ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும். கிரேவியை மாற்றி பரிமாறலாம்.

கேப்சிகம் பன்னீர் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். ரொம்ப பிஸியான நாட்களில் கூட இதை எளிதாக செய்து விடலாம். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம்.

பன்னீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பன்னீர் இந்த சப்ஜியை வீட்டிலேயே அதிரடியாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *