எங்களை தனிமைப்படுத்த முடியாது
உக்ரைன் தலைநகர் Kyivவில் இருந்த தகவல் தொடர்பு கோபுரம் தகர்க்கப்பட்டது; அதற்கு ரஷ்ய படைகள் குறிப்பிட்ட எச்சரிக்கையை முன்கூட்டியே வெளியிட்டனர்; இதே முறையை தான் நாங்கள் பின்பற்றுகிறோம். Kharkiv-வில், இந்திய மாணவரின் உயிரிழப்பு தொடர்பாக ரஷ்யா விசாரணை நடத்தும் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா, உக்ரேனிய மக்களுடன் சண்டையிடவில்லை; பொதுமக்களின் கட்டிடம், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை ரஷ்யா குறிவைக்கவில்லை; ரஷ்யா தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தாது. தற்போதைய, நெருக்கடியின் ஆழத்தை இந்தியா புரிந்துகொண்டுள்ளது.
ஐ.நா.வில் இந்தியா ஒரு சார்பற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தும் என்று ரஷ்யா நம்புகிறது என தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவிற்கு பல நண்பர்கள் உள்ளனர், எங்களை தனிமைப்படுத்த முடியாது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறியது குறிப்பிடத்தக்கது.