ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

உணவே மருந்தாக உண்பதால் கால்சியம் குறைபாட்டை போக்கலாம்

பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகள் இவற்றில் வைட்டமின்கள் இருக்கின்றன. மேலும் கால்சியம் உட்பட எல்லாச் சத்துகளும் நிறைந்துள்ளன. சரிவிகித உணவு தினமும் உட்கொள்வது அவசியம். அன்னாசி, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, பப்பாளி, ஆரஞ்சு போன்ற பல வகைகளிலும் கால்சியம் நிறைந்துள்ளன.

  • சரிவிகித உணவு தினமும் உட்கொள்வது அவசியம்.
  • அடிக்கடி காய்கறிகள் நிறைந்த சாம்பார் இடம் பெற கால்சியம் அதிகரிக்கும்.
  • இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் இவற்றைத் தவிர்க்கலாம்.

தினமும் இரண்டு அத்திப்பழம் சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. உலர் அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்தும் நிறைந்துள்ளன. சால்மன் மீன், மத்தி மீன் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளன. இவை கண்களுக்கு ஆரோக்கியத்தை காக்க உதவுவதோடு எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

கால்சியம் பரிந்துரைப்பது

அடிக்கடி காய்கறிகள் நிறைந்த சாம்பார் இடம் பெறுவதால் தினமும் உணவுகளில் ஒரு வழியில் நம் உடலில் கால்சியம் சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்து, புரதச் சத்து உள்ளன. பால் பொருட்கள் சிலர் உண்ணுவதில்லை. இவர்கள் தினமும் மூன்று பாதாம் வரை சாப்பிட கால்சியம் அதிகரிக்கும்.

பாதாமில் விட்டமின் பி2, இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. கால்சியம் குறைபாடு இருப்பது என்றாலே பரிந்துரைப்பது பால் பொருட்கள் தான். பெண்கள் அதிகம் பால் மற்றும் பால் பொருட்களை சேர்த்துக் கொண்டு வர, அத்துடன் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது.

கால்சியம் குறைபாடே காரணம்

ஞாபகமறதி, தசைபிடிப்பு, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சி இன்மை, மன அழுத்தம், பல் கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் செரிமானம் போன்றவற்றிற்கு கால்சியம் குறைபாடே காரணம். எனவே இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் இவற்றைத் தவிர்க்கலாம்.

உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தசைகளின் இயக்கத்திற்கு இதயத் துடிப்பு சீராக இருக்க கால்சியம் அவசியம். தேவையான முக்கிய சக்துகளில் ஒன்றாக கால்சியம் திகழ்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது கால்சியம். கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

கால்சியம் இழக்க காரணம்

சிறுநீர் வழியாக கால்சியத்தை தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். மேலும் வியர்வை, நகம், தோல் போன்றவற்றாலும் கால்சியம் இழக்கப்படுகிறது. இதற்கு ஈடாக கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது முக்கியம். ஐம்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 மில்லி கிராமும், 50 வயதை தாண்டிய பெண்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் மில்லி கிராமுக்கு மேலும் கால்சியம் தேவைப்படுகிறது.

கால்சியம் குறைபாடு

30 வயதைத் தொட்டாலும் கை வலிக்கிறது. கால் வலி, முதுகு வலி, போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. முதலில் 40 வயதிற்கு மேல் தான் இந்த வலிகள் வரும். ஆனால் தற்போது 30 வயதை தொட்டா இந்த வலிகளை சந்திக்க வேண்டியுள்ளது. முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *