பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
எல்லோருக்கும் பிடித்தமான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம். பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் கடையில் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுங்க. வாங்க ரெசிபிக்கு போகலாம்.
- பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் கடையில் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுங்க.
- எல்லோருக்கும் பிடித்தமான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்.
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
பால் ஒரு கப், இதில் கால் கப் தனியாக எடுத்து வைக்கவும். கான்பிளவர் மாவு ஒரு டீஸ்பூன், சர்க்கரை கால் கப், பட்டர் 2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு உடைத்தது தேவையான அளவு. அமுல் பிரஷ் க்ரீம் கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் சிறிதளவு.
செய்முறை விளக்கம்
ஒரு கடாயில் பால் எடுத்து அதை கொதிக்க வைக்கவும். பால் கொதிக்கும் நேரத்தில் மாவில் சிறிது பால் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த மாவை பாலில் சேர்த்து இதனுடன் நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி வைத்து இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்க்காமல் பாகு வரும் வரை காய்ச்சவும்.
கேரமல் பதத்தில் வந்ததும் இதனுடன் வெண்ணெய் சேர்த்து கிளறவும். ஒரு பிளேட்டில் நெய் தடவி வைத்து கொண்டு நன்றாக கலந்த பிறகு, நறுக்கிய முந்திரிப் பருப்பு கால் கப் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கலந்து வைத்த கலவையை தட்டில் கொட்டவும். நன்றாக ஆற வைத்து ஆறியபின் படலாக வரும் தோசை கரண்டியால் எடுத்துக்கோங்க.
இதன்பிறகு பட்டர் சீட்டால் செய்து வைத்துள்ள கரமலை நன்றாக நொறுக்கிக் கொள்ளவும். ஒரு பவுலில் அமுல் பிரஷ் க்ரீம் 200 சேர்த்து எடுத்துக் கொள்ளவும். அமுல் பிரஸ் ஐஸ்கிரீமை ஹேண்ட் பீட்டரால் கெட்டியான பதத்திற்கு வரும்வரை கலக்கவும்.
இதனுடன் கரமலை சர்க்கரையைப் பொடி செய்து சேர்த்து அடிக்கவும். இப்போது ரெடி பண்ண கான் ஃப்ளார் மாவு பாலை இதனுடன் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் கலந்து அடித்து வைத்து ஃபுட் கலரையும் சேர்த்துக்கொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள மேலே சிறிதளவு தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும். நறுக்கி வைத்துள்ள கரமலை சிறிதளவு தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பாலில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இப்போது ஐஸ்கிரீம் கரண்டியால் கலந்து கொள்ளவும். கலந்து வைத்து அதை ஒரு பவுலில் ஊற்றி கொண்டு பிறகு மூடி எட்டு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் தயார். இதை பரிமாறலாம்.