பட்டர் வாழைப்பழம் கேக் ரெசிபி
வீட்டில் விசேஷ தினங்களிலும், திருமண விழாக் காலங்களிலும் வாழைப் பழங்கள் நிறைய வீட்டில் இருக்கும். அதிகப்படியான வாழைப்பழங்கள் வீட்டில் இருக்கும் போது வித்தியாசமான ரெசிபி செய்து கொடுக்கலாம். வாழைப்பழம் வைத்து கேக் எளிமையாக செய்யலாம்.
பட்டர் வாழைப்பழம் கேக்
தேவையான பொருட்கள்
பசு வெண்ணை அரை கப், பொடித்த வெல்லம் அரை கப், லவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன், ஜாதிக்காய் பொடி கால் ஸ்பூன், ஒன்றிரண்டாக உடைத்த பாதாம் கால் கப், சர்க்கரை ஒரு கப், பெரிய முட்டை 3, பிசைந்த வாழைப்பழம் ஒன்றேகால் கப், ஆல் பர்ப்பஸ் மாவு 3 கப், ஆரஞ்சு செஸ்ட் இரண்டு ஸ்பூன், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் தலா ஒரு ஸ்பூன். உப்பு தேவைக்கு ஏற்ப. 2 கப் மோர்.
செய்முறை விளக்கம்
வெண்ணையை உருக்கி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, லவங்கப்பட்டை, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் பொடி மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். கேக் செய்யும் பாத்திரத்தில் சிறிது வெண்ணெயை தடவி காய்ச்சி வைத்துள்ள வெல்லத்தை சிறிது ஊற்றி விட்டு மீதி கலவையை வெண்ணெயுடன் கலந்து வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் சிறிது வெண்ணை, சர்க்கரை கலக்கி விடவும். ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி கலந்து கொண்டு இருக்க வேண்டும். இதனுடன் வாழைப்பழம் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். சோடா உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் ஆல், பர்பஸ் அனைத்தையும் இந்த கலவையில் கலந்து வாழைப்பழத்துடன் நன்கு சேருமாறு கலக்கி விடவும்.
கேக் செய்யும் பேன் பாத்திரத்தில் பாதி வெள்ளம் ஊற்றி மீதம் உள்ள வெள்ளம் சர்க்கரை கலவையின் மேல் பரப்பி ஊற்ற வேண்டும். பிறகு இதை 180 டிகிரியில் பேக் செய்து 40 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து சிறிது நேரம் குளிர விட்டு விடவும். பிறகு தேவையான ஷேப்பில் கட் செய்து ப்ளேட்டில் எடுத்து பரிமாறலாம். பட்டர் வாழைப்பழம் கேக் தயார். லேயரும், சர்க்கரைப் பாகும் எத்தனை அடுக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.