மத்திய பட்ஜெட்…5ஜி முதல் நதிகள் இணைப்பு வரை…
⭐பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2023ன் ஆண்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் உதவி வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
⭐2030 ஆண்டுக்குள் 280 கிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு, 19,500 கோடி ரூபாய் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக ஒதுக்கீடு
⭐ஒரு லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கீடு, மூன்றாண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிவிப்பு.
⭐2022-23 நிதியாண்டில் 5ஜி சேவையை வழங்க முடிவு, இதற்கான அலைக்கற்றை ஏலம் விடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிப்பு
⭐என் ஜி டி ஆர் எஸ் என்ற தனி அமைப்பு மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பதிவு செய்வதற்கான வழிவகைகளை செய்து தரப்படும்
⭐ஒரு நாடு ஒரு பதிவு என்ற இந்த முறை ஊக்குவிக்கப்படும், இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் உள்ள சிப். வைக்கப்பட்டிருக்கும். இது சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்
⭐1.5 லட்சம் தபால் நிலையங்கள் முழுமையான பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு கீழ் கொண்டுவரப் படுகிறது. ஏடிஎம்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை உள்ளிட்டவை செய்யப்பட உள்ளது இது கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பெரும் பலன் அளிக்கும்
⭐ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி -யில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்
⭐டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும், தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும், ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது.
⭐ஐந்து நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,பெண்ணாறு காவிரி இணைப்பு அதில் ஒரு திட்டம், மேலும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் விவசாயத் துறையில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் விவசாய நிலங்களை அளவிடுவது உரங்களை தெறிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
⭐சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கும் பெரிய அளவில் உதவியது.
⭐விமான போக்குவரத்தை இனி விலை உயர்ந்த விஷயமாக மாறுகிறது. Aviation tribune Fuel என்ற விமான எஞ்சின் எரிபொருளின் விலை 8.5% உயர்வு. இது வரை இல்லாத வரலாறு காணாத உயர்வாக இது பார்க்கப்படுகிறது, இந்த விலை உயர்வு நேரடியாக விமான பயண கட்டடத்தில் எதிரொலிக்கும்.
Good