பட்ஜெட்டில் : சுற்றுலா செல்ல தடையா?
சுற்றுலா தொழில் செய்பவர்கள் மிக முக்கியமாக கருதுவது இவைதான். பேருந்து கட்டணம், விமான கட்டணம், ஹோட்டல் புக்கிங், டிராவல் புக்கிங் இவற்றை அதிகரிக்காமல் இருக்க புதிய வரிகள் இல்லாமல் இருக்க வேண்டும். வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன் என்கிற பெயரில் வரிகளை கூட்டினால் அது அப்பாவி பொதுமக்கள் தலையில் தான் வந்துவிடும். இருக்கும் வரிகளை குறைத்தாலும் கூட, புதிய வரிகளை விடாமல் இருப்பது சிறப்பாக இருக்கும்.
சுற்றுலாத் தலங்களுக்கு போக்குவரத்து
பல புதிய சுற்றுலா தளங்களை உருவாக்கி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை வரவழைக்க ஊக்கத்தை கொடுக்க வேண்டும். அரசிடமிருந்து ஊக்கம் கிடைப்பதே சுற்றுலாத்துறை முன்னேறுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. முக்கியமாக கட்டுமானங்கள், பாலங்கள், சாலைகள் என ஒரு சுற்றுலா தளத்திற்கு தேவையான அந்த இடத்தை அடைய தேவையானவற்றை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வர வேண்டும்.
சுற்றுலாத் தலங்களுக்கு
இதற்கு தகுந்த வசதி வாய்ப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ரயிலில் பயணிப்பது குறைந்த செலவு என்பதால் தான் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். சுற்றுலாத் தலங்களுக்கு முழுமையாக இயக்கப்படாத ரயில்களால் மக்கள் மேலும் வாடகை வண்டிகள், பேருந்துகள் என அலைய வேண்டி உள்ளன. முடிந்தவரை முக்கிய சுற்றுலாத்தலங்களில் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தினால் போக்குவரத்துத் துறைக்கும் சுற்றுலாத்துறைக்கும் ஆதாயமாக அமையும்.
சுற்றுலாத் தலங்களுக்கு பெரிய நெட்வொர்க்
சுற்றுலாத்துறை மேம்படுவதோடு சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா தொழில்களை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது. இந்தியா முழுமைக்கும் பெரிய நெட்வொர்க் ஆக இருப்பது ரயில்வே. பெரும்பாலும் முக்கிய நகரங்களுடன் இணைந்திருக்கிறது. ஆனால் சுற்றுலாத்தளங்கள் பெரும்பாலும் இணைக்கப்படவில்லை. பல இடங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்வது தயங்கி செல்ல நேரிடுகிறது.
கன்னியாகுமரி – திருச்செந்தூர் சாலை, திருநெல்வேலி – குற்றாலம் செல்லும் சாலை உள்ளிட்ட பல சாலைகள் எப்போதும் எளிதில் பாதிக்கப்படுவதாக உள்ளது. இதனால் சுற்றுலாவுக்கான வாய்ப்புகளும் குறைகின்றன. மிகப் பெரிய நகரங்கள் மட்டுமே ஒழுங்கான சாலைகள் உடன் இணைந்து இருக்கிறது. ஓரளவுக்கு தரமானதாகவும் இருக்கிறது. சாலை போக்குவரத்து என்பது இந்தியாவின் முக்கியமான ஒன்று. பெரும்பான்மையான இடங்களில் ஒழுங்காக சாலைகள் இல்லாத காரணத்தால் பயணம் செய்ய முடிவதில்லை.
உலகிலேயே மிகப்பெரிய சுற்றுலா பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது. விரைவில் முதல் மூன்று இடங்களை பிடிக்க சில பட்ஜெட்களை வசதிகளுக்காக பணம் ஒதுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். சுற்றுலாத்துறை இந்த பட்ஜெட்டில் நிமிருமா அல்லது வழக்கம்போல் சுற்றுலாவுக்கு கில்லி கொடுத்துவிட போகிறதா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சுற்றுலா விரும்பிகளின் விருப்பம் என்னவோ இந்தியாவின் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்றளவும் சரியான கட்டுமானங்கள் இல்லாமலும், போக்குவரத்து வசதிகள் இல்லாமலும், சாலைகள் கூட சரியாக இல்லாமல் இருப்பதால், சீரமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.