உக்ரைன் அரசை கவிழ்க்க சதி…பிரிட்டன் பரபரப்பு குற்றச்சாட்டு..
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரமும் போர் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா உளவுத்துறை சதி வேலை தீட்டி வருவதாக பிரிட்டன் புகார் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ஆதரவளரான யெவ்ஹெனி முராயேவ் என்பவரை பிரதமராக்க முயற்சிப்பதாவும் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரமும் போர் ஏற்படக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளின், கூட்டமைப்பான நோட்டோ படைகள் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை நோட்டோ நாடுகள் வழங்கி வருகிறது.
மேலும் பிரிட்டன் தனது சைபர் வார் எனப்படும் போர்க்கப்பலை கருங்கடலை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்தக்கப்பலானது எதிரியின் சிக்னல்களை வைத்து சித்து விளையாட்டு காட்டும் கப்பல், அதாவது, எதிரியின் விமான தாக்குதல் நடத்க்கூடும் என்றால் அதற்கு தவறான சிக்னல்களை வழங்கி, அவர்களுடைய விமனங்களை வைத்து அவர்களை தாக்கும் போர் வியூகம் தான் , சைபர் வார்.
இதன் எதிர்விணையாக ரஷ்யாவும் , தனது நட்பு நாடனா பொலரஸ் நாட்டிற்கு ராணுவ கூட்டுப்பயிற்சி என்ற பெயரில் சக்தி வாய்ந்த எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்தையும், வீரர்களை அனுப்பியுள்ளது. பொலராஸ் நாடு உகரைன் அருகே உள்ள நாடு, அதனால், போர் ஏற்ப்பட்டால் உகரைனை இரண்டு பக்கமும் தாக்கலாம் என ரஷ்யா கணக்கு போட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் அரசு, உக்ரை அரசை கவிழ்க்க ரஷ்ய உளவுத்துறை சதி செய்து வருவதாகவும், தற்போதைய உக்ரைன் அரசை கவிழ்த்து அதற்கு பதிலாக ரஷ்யாவின் ஆதரவாளரான யெவ்ஹெனி முராயேவ் என்பவரை பிரதமராக்க முயற்சிப்பதாவும் குற்றம் சாட்டியுள்ளது.