குழந்தையை தகுந்த பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வதும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும்.
கொரோனா காலகட்டத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்று ஆய்வில் வெளியிட்டுள்ளனர். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
அது அவர்கள் குழந்தையை பாதிக்க கூடுவதுடன், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது மாஸ்க் அணிந்து கொள்வது மிக அவசியமாகும்.
குழந்தைக்கு பால் பாட்டிலை தொடுவதற்கும், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறும் அறிவுரைகளை பின்பற்றினால் உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியமாகவும் குறிப்பாக உங்கள் குழந்தைக்கு நோய் பரவாமலும் தடுக்க முடியும்.
உங்கள் வீட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் இடங்களை சுத்தம் செய்வதோடு, கூடுதலாக குழந்தைகளை பயன்படுத்தும் விளையாட்டு பொம்மைகள், போன்றவற்றில் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுவது அவசியமாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுவதும் இது தான்.
குழந்தை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை எப்பொழுதும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். சில வாரங்களுக்கு உங்கள் குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் அடிக்கடி வெளியில் சென்று வரும் வாய்ப்புகள் ஏற்படாமலிருக்கும். வெளியில் யார் கிருமியை சுமந்து வருகிறார் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அதனால் குழந்தைகளுக்கு தேவையான உணவு மருந்துகள், தெர்மாமீட்டர் மற்றும் இதர வீட்டுக்கு தேவையான பொருட்களான சோப்பு, டாய்லெட், பேப்பர், டயப்பர், போன்றவற்றை இருப்பின் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்போது நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக நிலவி வருகிறது. இதனால் உங்கள் வீட்டில் புதிய வரவான குழந்தைகளை காண்பதற்கு உங்கள் உறவினர் மிகவும் ஆவலாக இருப்பார்கள்.
அப்படி காண வருபவர்கள் தகுந்த இடைவெளியில் அமர்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காணொளிக்காட்சி வழியாக அவர்களிடம் உங்கள் குழந்தையை காண்பிக்கலாம். தற்போது உள்ள நிலவரப்படி இது உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
நோய் கட்டுப்பாடு நிறுவனம் அரசு வழிகாட்டுதல் படி சமூக விலகல் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது, குழந்தையை தூக்கும் போது உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் வாய், மூக்கு போன்ற பகுதிகளை தொடாமல் இருப்பது நல்லது.
இக்கட்டான காலகட்டத்தில் உங்கள் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தாலும், கைக்குழந்தை இருந்தாலும், மிகவும் கவனமாக அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதனால் உங்கள் இல்லத்தில் அல்லது உங்கள் இல்லத்தின் அருகாமையில் யாருக்கும் தொற்று பரவாமல் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தையை தகுந்த பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வது முக்கியமாகும்.