தற்போது வந்த திடுக்கிடும் தகவல்: முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மதியம் தனக்கு கொரோனா தொற்றுப் உறுதி செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
2012 முதல் 2017 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி அந்த ட்வீட்டில் போன வாரம் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொண்ட நபர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். வேறொரு விஷயமாக மருத்துவமனைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று வரை 22 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 10, இன்று மதியம் இவர் ட்விட்டரில் இந்த செய்தியை தெரிவித்த சற்று நேரத்திலேயே பலர் அவரவரின் ஆதரவைத் தெரிவித்து சீக்கிரம் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் முதலமைச்சரான மம்தா பானர்ஜி முன்னாள் ஜனாதிபதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
ராஜஸ்தானின் முதலமைச்சரான திரு அசோக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவ்விருவர் மட்டுமல்லாமல் டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கிரன் ரிஜிஜு, தமிழகத்திலிருந்து தயாநிதி மாறன் என பலர் ஆதரவுகளையும் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டே வருகின்றனர்.
அமித் ஷா, சிவ்ராஜ் சிங் சௌஹான், பி. எஸ். எடியூரப்பா, சித்தாராம்மையா என முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
மக்களே நாமும் இவர்களின் நலன் கருதி கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.