பிரெட் ஊத்தாப்பம்
வீட்டில் இருக்கும் உங்கள் செல்ல சுட்டிஸ்க்கு எளிமையான ஊத்தாப்பம் செய்து கொடுங்க. பத்து வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பிரெட் ஊத்தாப்பம் கற்றுக்கொடுங்கள். எளிதாக உடனடியாக தயாரித்து விடலாம். காலை வேளையில் வெளியே செல்லும் போது உடனடியாக இதை தயாரித்து சாப்பிட கொடுக்கலாம்.

பிரெட் ஊத்தாப்பம்
தேவையான பொருட்கள்
கடலை மாவு 50 கிராம், அரிசி மாவு 50 கிராம், தயிர் அரை கப், பிரெட் 3, வெங்காயம் 5, பச்சைமிளகாய் 3, கொத்தமல்லி சிறிது, எண்ணெய், உப்பு, சீரகம் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும். கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார். சூடாக பரிமாறலாம். பிரெட் ஊத்தாப்பம் அப்படியே சாப்பிடலாம்.