பிரட் சென்னா சீஸ் ரோல்
சில நேரங்களில் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அந்த சமயத்தில் இந்த ரோல் சமைத்துக் கொடுக்க அடடா. பிரட், சென்னா, சீஸ் வைத்து ரோல் போல செய்து கொடுக்க சுவைத்து மகிழ்வார்கள்.
பிரட் சென்னா சீஸ் ரோல்
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 1 நறுக்கியது. குடைமிளகாய் ஒன்று நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி தழை அரை கைப்பிடி, சீஸ் துண்டுகள் நறுக்கியது அரை கப். வேக வைத்த சென்னா ஒரு கப். பிரட் துண்டுகள் 10. கரம் மசாலாத்தூள் ஒரு ஸ்பூன். மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். எண்ணெய், உப்பு தேவையான அளவு. தக்காளி சாஸ் 2 ஸ்பூன்.
செய்முறை விளக்கம்
ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடை மிளகாய் பொடியாக நறுக்கியது எடுத்து வைக்கவும். வேக வைத்த சென்னா மிக்ஸியில் லேசாக மசித்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம் குடைமிளகாய் கொட்டி லேசாக வதக்கி விடவும். பிறகு இதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி பச்சை வாசம் போனதும் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
சூடு ஆறிய பிறகு நன்றாக பிசைந்து நீள்வாக்கில் துண்டுகளை உருட்டி எடுத்து வைக்கவும். பின்னர் இவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து இவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடி இருக்கும்படி உருட்டி எடுத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ரோலை வைத்து இருபுறமும் கருகாமல் புரட்டி போட்டு எடுத்து அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறலாம். சூப்பரான பிரட் சென்னா சீஸ் ரோல் தயார்.