கோவிட் 19 : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. இத ஃபாலோ பண்ணுங்க!
இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்க்கக் கூடாது. ஒரு நாள் முழுவதற்கும் தேவையான எனர்ஜி முக்கியமாக காலை உணவில் இருந்து தான் உடலுக்கு கிடைக்கிறது. கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, புரதம், மாவுச் சத்து ஆகிய அனைத்தும் கிடைக்கக் கூடிய பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் காலை உணவில் இடம் பெற வேண்டும்.
நாள் முழுவதும் புத்துணர்ச்சி
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக காலை எழுந்தவுடன் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அன்றைய நாளை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள உதவும். உடலை வலிமையாக்க, தளர்வாக்கி ஸ்டாமினாவை அதிகப்படுத்தும். சைக்கிளிங், ஜாக்கிங், நடை பயிற்சி போன்ற எளிய பயிற்சிகளை தொடங்கலாம். சோர்வை விரட்ட சிறந்த வழி உடற்பயிற்சி செய்வது தான்.
உடல் வரட்சி
காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். தேன் கலந்த தண்ணீர் அல்லது எலுமிச்சை கலந்த தண்ணீர் போன்றவற்றை காலையில் குடிப்பது சிறந்தது. உடல் வரட்சி ஆகாமல் நீர் எடுத்துக்கொண்டு இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக மிக அவசியம்.
பாக்டீரியாக்களை அழித்து சுத்தப்படுத்த
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாயை சுத்தப்படுத்த உதவுகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். ஒரு பழமையான ஆயுர்வேத முறை சுத்தமான தேங்காய் எண்ணையை கொண்டு இரண்டு நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
சில எளிய பயிற்சி
மேலும் காலை எழுந்ததும் எக்சசைஸ் செய்வது கடினமாக உணர்ந்தால் யோகா செய்யலாம். உடல் தசையை தளர்த்தி மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. படுக்கையிலேயே சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சைல்டு போஸ் என்று சொல்லக் கூடிய ஆசனங்கள் எளிமையாக இருக்கும். இந்த பயிற்சிக்கு பிறகு நேராக அமர்ந்து சில மூச்சுப் பயிற்சிகளைச் செய்தால் மனமும், உடலும் உற்சாகமடையும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி ஒரே நாளில் அதிகரித்து விடாது. சில உணவு பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் கடைப்பிடித்தால் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்தே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.