செய்திகள்தமிழகம்

ஷாக்கான பொதுமக்கள் நகராட்சி ஆணையர் வதந்திகளைப் பரப்புவதாக தகவல்

காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் வீட்டின் முன் மெட்டல் சீட் தடுப்பு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியிருந்த வீட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வீட்டின் முன் பகுதியில் மெட்டல் சீட் தடுப்பு அமைத்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகரில் ஒரு வீட்டின் முன் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் சீட் தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால் இந்த வீடு இரண்டு வருடமாக பூட்டி கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். யாரும் வசிக்காத வீட்டில் வெப்பநிலை பரிசோதனை செய்ததாக நகராட்சி தற்காலிக ஊழியர்கள் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.

இந்த வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வேறு ஒரு பகுதியில் வசிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக யாருமே இல்லாத வீட்டில் நகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இந்த தனிமைப்படுத்தப்படும் ஒரு வீட்டிற்கு மட்டும் மெட்டல் சீட் அடிக்க 14 நாட்களுக்கு 8000 ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

யாருமே வசிக்காத வீட்டிற்கு மெட்டல் சீட் தடுப்பு வைக்கப் பட்டுள்ளதால் அப்பகுதி உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் பணிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பணிக்கு சென்றால் மட்டுமே ஊதியம் என்கின்ற நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள்.

வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் நகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக பலரும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்ட போது நோயில் பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட வீட்டில் தான் வசித்து வருகிறார் என்பதனை கள ஆய்வு செய்த பிறகே மெட்டல் ஷீட் வைத்துள்ளோம்.

தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்த பிறகு தனிமைப்படுத்திக் கொள்வதற்காக வீட்டிற்கு வர இருக்கிறார். சம்பந்தப்பட்ட நோயாளிக்கு அப்பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் இதுமாதிரியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *