சினிமாசினிமா பாடல்கள்

வாரிசு வசூல்வேட்டை ரிப்போர்ட்

11 நாளில் 250 கோடி வசூலை அள்ளிய விஜயின் வாரிசு. விஜய் என்றாலே மாஸ் தான். அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றியை பெற்று தருகின்றன. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வெளியான வாரிசு திரைப்படமானது பொங்கல் நேரத்தில் பெரிதும் பேசப்பட்டது.

வாரிசு விஜய் நடிகர்கள்

நீண்ட காலத்திற்கு பின்பு விஜய் குடும்ப கதையை முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார். அது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வந்தது. தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்திருந்தார். ராஸ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு விஜயுடன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

குடும்ப படம்

ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற வாரிசு தமிழில் வெற்றி படமாக ஓடியுள்ள்து. 11 நாட்களில் சுமார் 250 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. விஜயின் குடும்ப படமான வாரிசு எந்த அளவிற்கு வைரலானதோ அதே அதிக அளவு விமர்சனத்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் படிக்க : சாத்தான்குளம் பற்றி இயக்குனர் வெற்றி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில்

டாப் டிரெண்டிங்கில் ரஞ்சிதமே

ரஞ்சிதமே பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாட டிரெண்டிங்கில் டாப் லிஸ்டில் உள்ளது. வாரிசு வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது என்பது தற்போது வைரலாக வருகின்றது. 11 நாளில் 250 கோடி என்ற தகவலும் படக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. விஜய் எப்போதும் வெற்றி நடிகர் மாஸ் நிறைந்த நடிகர் அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது சொல்லவா வேண்டும் தாய் மகன் பாசம் பாடல் தாய்மார்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. விமர்சனங்களை எல்லாம் தகர்த்து 250 கோடி வசூலை வாரிசு படம் பெற்றுள்ளது என்பது ஹாலிவுட் பெரிய டாக்காக இருக்கின்றது

மேலும் படிக்க : ஆத்தி..ஒரு நாள் முழுசா குதிரை மேலேயே இருந்த நடிகர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *