செய்திகள்தமிழகம்

அதிமுக தனித்து போட்டி… கூட்டணி உடைய இது தான் காரணமா..?

தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சியான அதிமுகவில் இருந்து பிரிந்து தனித்துப் போட்டியிடப் போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. எனினும், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான கூட்டணி அப்படியே தொடரும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரு கூட்டாளிகளும் முரண்பட்ட தஞ்சாவூர் சிறுமி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் பாஜகவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விடுதி வார்டனின் துன்புறுத்தலால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இம்மாத தொடக்கத்தில் இறந்தார். பின்னர், இது தொடர்பான வீடியோ கிளிப் வைரலானபோது சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் பள்ளி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மதமாற்றத்தால் தான் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தமிழக பாஜக பல்வேறு போராட்டங்களை நடந்து வந்தது. இருந்த போதிலும் கூட்டணி கட்சியான அதிமுக அதில் இருந்து விலகியே நின்றது.

இறந்த சிறுமிக்கு நீதி கோரி சென்னையில் பாஜக கட்சியினர் நடத்திய போராட்டத்தில் அதிமுக தலைமை குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நையினார் நாகேந்திரன் அதிமுக தலைவர்களுக்கு “ஆண்மை” இல்லை என்று கூறியது, அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது. இதன் காரணமாக தான் கூட்டணி பேச்சு வார்த்தை முறிந்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் முதல்வரை விமர்சித்த பிறகு ஒன்றாக பிரசாரத்திற்கு சென்றால் அது மிகப்பெரிய தவறு. நாகேந்திரன் கூறியதால் தான், பா.ஜ.,வுக்கு அதிக சீட் கொடுக்க, அ.தி.மு.க., தயங்கியது,” என, அரசியல் விமர்சகர், பெங்கலூர் மணிகண்டன் கூறினார். மேலும், “உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜகவுடனான கூட்டணியை முறிப்பது அதிமுகவுக்கு நல்லது. ஆனால், 2024 தேர்தலில் அ.தி.மு.க., அக்கட்சியுடனான உறவை கைவிடும் என எதிர்பார்க்க முடியாது. 2024 தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அண்ணாமலையே ஊடகங்களுக்கு தெரிவித்தார் என தெரிவித்துள்ளார்.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே கூட்டணியை உடைக்க முடிவு செய்தோம், ஏனென்றால் முதல்கட்ட சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக 10 சதவீத இடங்களை எங்களுக்கு வழங்கியது, ஆனால் நாங்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்ப சீட்டை ஒதுக்கும் நிலையில் அதிமுக இல்லை,” என தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை முறிந்ததற்கு நாகேந்திரனின் கருத்துதான் காரணம் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்ததுடன், இந்த பங்கீடு தனது சொந்த தொண்டர்களின் நலனை பாதிக்காது என்பதை உறுதி செய்த பின்னரே பாஜகவுடன் தொகுதிகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறினார். “தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்பது பாஜகவின் விருப்பம், அது குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. நாகேந்திரனின் கருத்து குறித்து, நாங்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்டார்” என்று ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *