ஒத்த ஓட்டு.. இது வேற மாறி..!! மாஸ் காட்டிய பாஜக..!!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வரும் நிலையில், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
முன்னதாக கடந்த ஊராட்சித் தேர்தலில் கோவையில் உள்ள ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெறும் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே எடுத்திருந்தார். இது அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக நக்கலடிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரே ஓட்டால் பாஜக வேறுமாதிரி கவனத்தை ஈர்த்துள்ளது. கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபிநாத் என்பவர் வெறும் ஒரு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சோழபுரம் பேரூராட்சியின் 3வது வார்டில் திமுக சார்பாக சுரேஷ், பாஜக சார்பாக கோபிநாத், அதிமுக சார்பாக தர்மலிங்கம், அமமுக சார்பாக ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பாஜக வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆளுங்கட்சியான திமுகவின் வேட்பாளர் 133 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த வார்டில் அதிமுக வேட்பாளருக்கு வெறும் ஐந்து வாக்குகளும், அமமுக வேட்பாளருக்கு 51வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான திமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அப்பகுதி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியின் 8வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா என்பவரும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.