மீண்டும் பாஜக..பஞ்சாப்பில் ஆட்சியை இழக்கும் காங்…?
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 225 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் வீட்டோ எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி 21 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 26 முதல் 32 இடங்களை கைப்பற்றலாம் எனவும், காங்கிரஸ் கிட்டத்தட்ட 32 முதல் 38 இடங்களைப் பெறும் என ஏபிபி – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது பஞ்சாப் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.