ஆரோக்கியம்சமையல் குறிப்புமருத்துவம்வாழ்க்கை முறை

உடல் எடையை குறைக்க.. உடல் நலனுக்காக சேர்த்துக்கங்க..

நார்ச்சத்து நிறைந்துள்ள பாகற்காய் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உணவில் இருக்கும் சத்துக்களை பிரித்து கொடுப்பதற்கு உதவுகிறது. தேவையில்லாத கொழுப்பை வெளியேற்றுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவில் அடிக்கடி பாகற்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயை பொரியலாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

பாகற்காயில் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும்.

பாகற்காயை சிறுவயது முதல் கொடுத்து பழக்க வேண்டும். பாகற்காய் உடல் நலனுக்காகவே விளையக்கூடிய காய் வகைகளில் ஒன்று.

பாகற்காய் குழம்பு

தேவையான பொருட்கள் : பெரிய பாகற்காய் 2, சிறிய வெங்காயம் 10, தக்காளி விழுது கால் கப், வர மிளகாய் 4, மல்லி, மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், எள் ஒரு ஸ்பூன், எண்ணெய் இரண்டு ஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை ஒரு ஸ்பூன், புளிக்கரைசல் கால் கப், உப்பு தேவையான அளவு.

செய்முறை : பாகற்காயை கழுவி விதைகளை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஊற விடவும்.

பிறகு சிறிது நீர் சேர்த்து கழுவி எடுத்து நீரை முற்றிலும் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், மல்லி, சீரகம், எள்ளு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்க வேண்டும்.

பிறகு இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு பொன்னிறமாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கடைசியாக அரைத்து வைத்திருக்கும் பொடி, நாட்டுச் சர்க்கரை, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மணமான பாகற்காய் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *