நாகார்ஜுனாவுக்கு காத்திருந்த பிறந்தநாள் ஆச்சரியம்
அக்கினேனி நாகார்ஜுனா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நம்ம மெட்ராஸ் பையன் நினைக்கத்தான் ஸ்டைலா சொல்லக்கூடிய ஒரு நடிகர் நாகார்ஜுனா. ஆமாங்க 29 ஆகஸ்ட் 1959 இப்போ சென்னை பழைய மதராசப்பட்டினத்தில பிறந்திருக்காரு நாகார்ஜுனா.

பெரும்பாலான தெலுங்கு படத்துல நடிச்சாலும் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரிஞ்ச முன்னணி நடிகரா திகழ்பவரு நாகார்ஜுனா. சூப்பரான திரை பின்னணி கூடிய நாகார்ஜுனா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில பொறியியல் பட்டப்படிப்போட முதல் ஆண்டு முடிச்சுட்டு அப்படியே வெளிநாட்டுக்குப் பறந்து போய் மத்த மூன்று ஆண்டுகளையும் படிச்சுட்டு சூப்பரா ஸ்மார்ட்டா நம்ம நாட்டுக்கு திரும்பி இருக்காரு.
1984 தகுபதி குடும்பத்திலிருந்து பெண் எடுத்து இருக்காங்க அக்கினேனி குடும்பம். லக்ஷ்மி நாகார்ஜுனா திருமணம் 1984 நடந்தது. அவங்களுக்கு நாகசைதன்யா அக்கினேனிங்கற மகன் 1986 பிறந்தாரு.

1986ல விக்ரம் படம் மூலமா திரையுலகத்துக்கு அறிமுகமானாரு நாகார்ஜுனா. 1989 இயக்குனர் மணிரத்னம் எடுத்த கீதாஞ்சலி படம் பெருசா வரவேற்கப்பட்டது. அதே வருஷம் ராம் கோபால் வர்மா இயக்கிய சிவா படம் அடுத்தடுத்து வெற்றி வாய்ப்பு நாகார்ஜுனாவ தேடி வந்தது.
1990 ஹிந்தி திரையுலகத்தில் நாகார்ஜுனா அறிமுகமானார். அந்த வருடம் இவருக்கும் மனைவி லக்ஷ்மி தகுதிக்கு விவாகரத்து நடக்க 1992ல நடிகை அமலாவ திருமணம் செஞ்சுக்கிட்டாரு. இந்த தம்பதியருக்கு பிறந்தவர் தான் அகில் அக்கினேனி.

இவருடைய திரையுலகப் பயணத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க படமான அன்னமயா ஒரு சுயசரிதை படம். 1997ல வெளிவந்த இந்தப் படத்துல அன்னமாச்சார்யா கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் நாகார்ஜுனா. அதே வருஷம் தமிழ் திரை உலகில அறிமுகம் ஆனாரு.
கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

கதாநாயகிய தூக்கிட்டு செமையா ஸ்மார்ட்டா நடிச்சிருப்பாரு ரட்ஷகன் படத்துல. அதுமட்டுமில்லாம இப்போ சமீபத்துல தோழா படத்துல கார்த்திக் கூட வீல் சேர்ல நடிச்சிருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தில எந்தவித ஏமாற்றமும் ரசிகர்களுக்குக் கொடுக்காம சூப்பரா நடிச்சிருந்தாரு இன்னுமும் நடிச்சிட்டிருக்காரு.

இன்னிக்கி அவருடைய பிறந்தநாள முன்னிட்டு நாகார்ஜுனா நடிக்கும் வைல்ட் காட் என்னும் தெலுங்கு திரைப்படத்தோட குழுவினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சூப்பரான போஸ்டர் மூலமா சமூக வலைதளங்கள்ல வெளியிட்டு இருக்காங்க.
1986-2020 34 வருட திரையுலக பயணத்தில் பல விருதுகளை வென்று வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வந்திருக்காரு நாகார்ஜுனா. பிறந்தநாள் நல்வாழ்த்துக்களோட மேலும் பல வருடங்கள் இந்த வெற்றி தொடரட்டும்னு விஷ் பண்ணிடுங்க மக்களே.