சினிமா

நேற்று நடிகையர் திலகம் இன்று அண்ணாத்த நாளை சர்காரு வாரி பட்டா

நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவை மறுபடியும் நாமெல்லாம் ரசிக்க ரசிக்க திரையில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்று 28 வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு மகேஷ்பாபு கூறிய நற்செய்தி மற்றும் குட்லக் சசி படக்குழுவின் அழகான பிறந்தநாள் வாழ்த்து.

  • 17 அக்டோபர் பிறந்த நாளைக் கொண்டாடும் தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ்.
  • தலைவர் ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் திரை பின்னணி கொண்டவர்.
  • பிரபலமான தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் அடுத்தடுத்த படங்கள்.

கீர்த்தி சுரேஷ்

17 அக்டோபர் 1992 சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ் பள்ளிப் பருவத்தில் கேரளத்திற்கு சென்று மலையாள பைங்கிளியாக மலர்ந்த பின் கல்லூரிக்காக சென்னை மற்றும் வெளி நாடுகளில் சுற்றுப்பயணத்தார். திரையுலக பயணத்தை அவ்வப்போது மேற்கொண்டார்.

திரைப் பயணம்

தந்தை சுரேஷ் மலையாள திரையுலகில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மேலும் தாய் மேனகா தமிழ் திரையுலகில் நடிகை, கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக ஓரிரு படங்களில் நடித்தவர். பிறகு 2013 மலையாள திரையுலகில் கீதாஞ்சலி படத்தில் நாயகியாக அறிமுகமானார். மூன்று படங்களுக்கு பிறகு 2015 தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் படிக்க : ஜூனியர் குஷ்புவிற்கு திருமணமா? இல்லையா!

கோலிவுட்

விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் படத்தில் நடிக்கத் துவங்கி சிவகார்த்திகேயன், இளையதளபதி விஜய், விக்ரம், விக்ரம், விஷால் மற்றும் சூர்யாவுடன் இணைந்து மக்களை சொடுக்கு மேல சொடுக்கு போட வைத்த நடிகை. சமீபத்தில் ஓடிடியில் வெளியான பென்குயின் என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாநதி/நடிகையர் திலகம்

நடிகை சாவித்திரி அம்மாவை திரையில் ரசித்த கூட்டத்திற்கு மத்தியில் மறுபடியும் அவர்களை திரையில் கொண்டு வந்து கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷுக்கு பலத்த பாராட்டு. திரைப்பயணத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும் ரீல் சாவித்திரி அம்மாவாக நடித்ததே காலத்திற்கும் அழியாத புகழ்.

அப்டேட்ஸ்

மலையாளத்தில் மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் படம் வெளியிட காத்திருக்கும் நிலையில் தமிழ்த் திரையுலகத்தின் தலைவர் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த, தெலுங்கு திரையுலகில் நிதினுடன் ரங் தே மற்றும் பல படம் படங்களோடு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டா படத்தில் நாயகியாக ஆன்போர்ட் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் மிஸ் இந்தியா மற்றும் குட் லக் சகி படப்பிடிப்பு முடிந்து வெளியிட தேவையான தயாரிப்பு வேலைகள் நடக்கும் நிலையில் உள்ளது. குட்லக் சகியின் படக்குழுவினர் கீர்த்தி சுரேஷிற்கு தந்த பிறந்தநாள் காணொளி இதோ.

மேலும் படிக்க : மாஸா சிம்புவின் பத்துதலை இசை வெளியீடு

https://www.instagram.com/p/CGb9_TfhzAU/?igshid=1nwjml9iwhor5

28வது பிறந்தநாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷிற்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சி நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *