பறவை காய்ச்சல் பீதி:- 25,000 கோழிகளை கொல்ல உத்தரவு..
பறவைக் காய்ச்சல் பீதியின் எதிரொலியாக மும்பையில் ஒரு சுமார் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாபூர் தாலுகாவின் வெஹ்லோலி கிராமத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் திடீரென சுமார் 100 கோழிகள் உயிரிழந்தன. பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சப்பட நிலையில், கோழிகளை ஆய்வுக்கு அனுப்ப அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தானே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜே நர்வேகர்; நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கால்நடைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இறந்த பறவைகளின் மாதிரிகள் புனேவை தளமாகக் கொண்ட ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து டாக்டர் பௌசாஹேப் டாங்டே, H5N1 பறவைக் காய்ச்சல் காரணமாக பறவைகள் இறந்ததை சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தின. இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது குறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சகத்துக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது . கோழிப்பண்ணையை சுற்றியுள்ள சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.