சினிமா

பிகிலுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

இந்தவருட  தீபாவளி கொண்டாட்டம் விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப ஜோராக இருக்கவுள்ளது.  மில்லியன் லைக்குகளைப் பெற்று சரித்திர சாதனைகளை  செய்யவுள்ளது விஜயின் பிகில். 

விஜய் ஜோடியாக நயன்தாரா

விஜய் நடித்து அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடப்பட்டது ஆகும். ரசிகர்களின் கொண்டாட்டம் இப்போதே  தொடங்கிவிட்டது.

டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ்,  விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் படத்தில்  நடித்துள்ளனர்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு, கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கிறார். பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ள படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரான பிகில் படத்திற்கான சென்சார் முடிந்த கையோடு, பிகில் திரைப்பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்துள்ளனர்கள்.

யு/ஏ சான்றிதழ் பிகில் படம்

யு/ஏ சான்றிதழ் பிகில் படம்   பெற்றுள்ளது. இது  3 மணி நேரம் ஓடும்.

அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில், பிகில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. #BigilTrailer2 மில்லியன் லைக்குகளைத் தாண்டியுள்ளது என கூறி உள்ளார்.

தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா  பிகிலுடன் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் பெருகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *