பிகில் வேம்புவிற்கு பிறந்தநாள்
நம்ம தமிழ் பொண்ணு இந்துஜா ரவிச்சந்திரனுக்கு இன்றைக்கு பிறந்தநாளுங்க. தமிழ் திரையுலகத்தில மட்டுமே துள்ளிவரும் மான்குட்டியா இருக்கும் இந்துஜ ரவிசந்திரனோட முதல் படம் மேயாத மான்.
‘தங்கச்சி என் தங்கச்சி’
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்த மேயாத மான் படத்துல வைபவ் சிவாஜி கணேசனாவும் இந்துஜா சாவித்திரி அம்மாவாகவும் முகமூடி போட்டு அண்ணன் தங்கச்சி பாசத்தை வாழ்ந்து காட்டி இருப்பாங்க.
‘தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு’
அப்பப்பா வேற லெவல் ரசிகர்கள்ல எமோஷனலாக தாக்கிட்டாங்க. கதாநாயகனோட தங்கச்சிங்கறதவிட இரண்டாவது கதாநாயகியாக விவேக் பிரசன்னா கூட அசத்தலா தன்னோட திரையுலக பயணத்தை தொடங்கி இருந்தாங்க இந்துஜா.

1 ஆகஸ்ட் 1994 தமிழகத்தில வேலூருல பிறந்து இருக்காங்க இந்துஜா. பொறியியல் பட்டப்படிப்பு படிச்சிட்டு இருந்த இந்துஜா தன்னோட கல்லூரி வாழ்க்கையிலேயே குறும்படம் மாடலிங் மற்றும் பெரிய பெரிய படங்களுக்கான ஆடிஷன் எல்லாமே செஞ்சுகிட்டு இருந்தாங்க.
பிரபலமான இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் கண்ட பிடிச்சவங்க தான் இந்துஜா ரவிசந்திரன். தன்னோட 23 வயசுல அறிமுக இயக்குனரான ரத்னகுமார் எடுத்த மேயாத மான் திரைப்படம் மூலமா திரையுலகத்துக்கு 2017ல அறிமுகப்படுத்தப்பட்டாங்க இந்துஜா.

அடுத்த வருடம் விக்ரம்பிரபு கூட மருத்துவர் கதாபாத்திரத்தில் 60 வயது மாநிறம் படத்துல நடிச்சாங்க. 2019 இளையதளபதி விஜய் மற்றும் பரியேறும் பெருமாள் கதிர் நடித்த பிகில் படத்தில கால்பந்து விளையாட்டு வீரராக வேம்பு கதாபாத்திரத்தில பாய் கட் செஞ்சுக்கிட்டு விளையாட்டு வீரர்களின் உடல் கட்டோட பட்டைய கிளப்பிட்டு இருந்தாங்க இந்துஜா.
சமீபத்துல பெருசா பேசப்பட்டற படமான மூக்குத்தி அம்மன் படத்துல நடிச்சிட்டு வராங்க. இப்படி மூணே வருஷத்துல இளம் வயது நடிகை இந்துஜா திரை உலகத்துல பிரமாதமா தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக பயணச்சிட்டு இருக்காங்க.
இப்படி வெள்ளித்திரை பயணம் போயிட்டு இருக்க திரவம் என்னும் வெப் சீரீஸ்லையும் பிரசன்னாவோட வக்கீல் கதாபாத்திரத்தில ஆஜராகி இருக்காங்க இந்துஜா. எல்லா பக்கமும் ரவுண்டு கட்ட ஆரம்பிக்கும் இளம் நடிகை இந்துஜா ரவிச்சந்திரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.