பிக்பாஸ் புகழ் ஆரவ் திருமணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்
பிக்பாஸ் புகழ் ஆரவிற்கு இன்று திருமணம் மகிழ்ச்சிகரமாக நிறைவேறியது. புது மாப்பிள்ளைக்கு ஜோடி திரை உலகின் புது நடிகை ராஹி ஆவார்.

ஆரவ்-ராஹி
பிக் பாஸில் பங்கு கொள்வதற்கு முன்பு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார் ஆரவ். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி மற்றும் விஜய் ஆண்டனியின் சைத்தான் படம் பார்த்திருப்பீங்கள!

பிக் பாஸிற்கு முன் பிக் பாஸிற்கு பின் என இவரின் திரையுலக பயணம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. பிக் பாஸ் வெற்றியாளராக அறிவித்த பின் கதாநாயகராக படங்களை நடிக்கத் தொடங்கினார் ஆரவ்.

கதாநாயகனுக்கு ஏற்ற கதாநாயகியை தேர்ந்தெடுத்துள்ளனர். ராஹி கௌதம் வாசுதேவ் மேனனின் புது கதாநாயகி. ஜி. வி. எம்.-யின் ஜோஷுவா திரைப்படத்தின் கதாநாயகி ராஹி.

சென்னையில் தி ராயல் பாம்ஸில் கோலாகலமாக நடந்த பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளர் ஆர்வ்- ஜி. வி. எம். கதாநாயகி ராஹி திருமணம். சிறிய கூட்டத்துடன் சந்தோஷமாக நிறைவேறியது.

இவருடன் பிக் பாஸ் சீசன் 1ல் பங்குகொண்ட சக போட்டியாளர்களான பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சினேகன், காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சுஜா வருணி என பலர் இவரின் திருமணத்தில் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுடன் திருமணம் நிறைவேறியது என பல புகைப்படங்கள் சான்றாக அமைகிறது.


கே. எஸ். ரவிக்குமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி என பிரபல இயக்குனர்களும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் சக்தி என பலர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரவ் ஓவியா கிசுகிசு வந்துபோக இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே திகழ்ந்தனர் என கூறினார்கள்.

ஆரவ்-ராஹி இருவரும் அறிமுகமாகி ஒரு வருட காலம் தெரிந்தவர்களாக வாழ்க்கையை பயணிக்க இருவரின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் திருமணம் கோலாகலமாக சந்தோஷமாக இன்று சென்னையில் நிறைவேறியது.




