ஆவலுடன் ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 4
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் இந்திய அளவில் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். தனியார் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4
கொரோனா பொது முடக்கத்தால் சற்று தாமதமாக தொடங்க உள்ள தமிழிலும் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வரப்போகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ பல தொலைக்காட்சிகளிலும் விறுவிறுப்பாக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி
நெட்டிசன்களுக்கும் மீம் கிரியேட்டர்களுக்கும் விருந்து வைக்கும் வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக தனியார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளன.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்
இதில் யார் யார் இந்த முறை பங்கேற்க போகிறார்கள் என்ற போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் இன்னும் வெளிவராத நிலையில் நெட்டிசன்கள் பலர் தங்கள் யோகங்களையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றார்கள்.
வெளிவருகின்ற அறிக்கையில் பங்கேற்பாளர்களின் அதிகாரபூர்வமான பெயர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.