Bigboss update: பிக்பாஸ் வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம்; பதற்றத்துடன் பிக்பாஸ் வீடு
பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்கே சென்று பிக்பாஸ் பிரபலம் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் கதைகளத்துடன் மக்களை அதிகமாக கட்டி இழுக்கும் வகையில் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் வந்துவிட்டன. சினிமாவை விரும்புவதை விட ரியாலிட்டி ஷோக்களை விரும்புபவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களை இருக்க முடியாது.
பிக்பாஸ் சீசன் 10
தமிழில் பிக்பாஸ் சீசன் 7 ஓடிக்கொண்டு உள்ளது இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வருகிறார். இந்நிலையில் கன்னடத்திலும் பிக்பாஸ் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. அதில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 10 கலர்ஸ் சேனலில் ஓடிக் கொண்டு உள்ளது.இதனை பிரபல சினிமா நடிகர் மற்றும் இயக்குனரான கிச்சா சுதீப் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.இதில் பாக்யஶ்ரீ, எஷானி , வினய், தனிஷா, அவினாஷ், சித்ரால், வர்தூர் சந்தோஷ் என மொத்தம் 19 பேர் பிக்பாஸ் சீசன் 10 இல் பங்கேற்று உள்ளனர்.
வனத்துறையால் கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம்
மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 10 இல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள வர்தூர் சந்தோஷ் என்பவர் வனத்துறையினரால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புலி நகம் உள்ள செயினை அணிந்திருந்தார் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் அனைவருக்கும் இது தெரியவந்தது. இந்த நிலையில் வனத்துறையினருக்கு புகார்கள் வர அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வர்தூர் சந்தோஷ் அணிந்திருந்த செயினை ஆராய்ச்சி செய்தனர்,அது ஒரிஜினல் புலி நகம் என்பதை உறுதி செய்த பின்பு சந்தோஷை வனத்துறையினர் கைது செய்தனர்
.புலியால் வந்த சோதனை
புலி நகம் , பல் ஆகியவற்றை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும் என்பதால் வனத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பிக்பாஸ் பிரபலம் கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் ஒளிபரப்பாக கூடிய மிகப் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவில் இதுபோன்று நடந்திருப்பது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.