பிக்பாஸில் அடுத்து என்ன தகவல்கள்
பிக் பாஸ் இன்றைய தமிழ்நாட்டில் அதிக மக்களால் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் நான்காம் பகுதி தொடங்குகின்றது. பிக் பாஸ் சீசனுக்கான டீசர்கள் வெளியாகி இருக்கின்றன.பிக்பாஸ் டீசர் தரமானதாக கலை உணர்வோடு மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றது.
அத்துடன் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிக் பாஸ் டீசரின் கமலஹாசன் அவர்கள் கண்ணசைவில் கணிசமாய், நடன அசைவுடன் நம்மைக் கைது செய்து இருப்பார். இவர் வயதானாலும் அவரது நடிப்புக்கு இளமை என்றும் மாறவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் ,யார் பங்கேற்பார்கள் என்ற ஆவலும் முன்கணிப்பு நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் நான்காம் சீசன் திருவிழா பங்கேற்க ரம்யா பாண்டியன் இருப்பார் என்று அதிகம் பேரால் கணிக்கப்படுகின்றது. பிக்பாஸில் இசைத்துறை சார்ந்த ஒருவர் இருப்பார்கள். அடுத்ததாக காமெடி நபர்கள் யாராவது ஒருத்தர் இருப்பார். காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்க புகழ் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் விமர்சனத்திற்கு பெயர்போன வில்லங்க வனிதா கெஸ்ட் ரோல் செய்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் புகழ் அல்லது டிஎஸ்கே, யோகிபாபு அல்லது தீனா யார் வேணாலும் பிக் பாஸ் வரலாம் என்று தகவல்கள் கிடைக்கின்றன இந்த முறை கொரோனா இருப்பதால் சுகாதாரம் முழுமையாகவும் பேசப்படும் ஒன்றாக இருக்கும். சுத்தம் சோறு போடும் என்று கமலஹாசன் ஸ்டைல்
சுத்தம் என்பது நமக்கு என்ற பாடல் வரியில் கலக்கி வரும் அத்துடன் பிக் பாஸ் சீசன் முழுவதும் கடந்த முறை இருந்த காட்சிகள் முழுமையாக இருக்காது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்வைத் தனது அரசியலுக்கான ஒரு முன்னோட்ட பார்வை மக்கள் மனதில் எளிதில் நிற்க வேண்டும் என்று கமலஹாசன் திட்டமிட்டு இயங்குவார் என்று நம்பப்படுகின்றது. தனது அரசியல் பார்வை சமூக பார்வை இங்குக் கமலஹாசன் பகிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
கொரோனா ட்ரெண்டிங் என்பதா குழுவில் யாருக்கேனும் உடல்நிலை சரி இல்லாமல் போனால் தொடர்பான கொரோனா தொடர்பான அச்சங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இசை துறையைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் பிக்பாஸில் பங்கேற்கலாம் என்று சொல்லி இருந்தேன். ஆனால் சிவாங்கி பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து ரியாஸ் கான் நல்லது உமா ரியாஸ்கான் பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு இருக்கின்றது இந்த முறை மகன் விட்டதை தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி அல்லாது காமெடியரான புதிதாக இணைந்திருக்கும் ஆதவன் அவர்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அனைத்தும் கணிப்புகள் மட்டும்தான் ஆனால் நடக்கும்போது தான் முழுமையான நல்ல கிடைக்கப் பெறலாம்.
பிக் பாஸ் என்ற ஒரு நிகழ்வு நடத்தப்பட வேண்டுமா இதனால் யாருக்கு என்ன பயன் என்று பல தரப்பில் மக்கள் பேசி வருகின்றனர். இதனால் ஒரு சிலருக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து எந்தப் பயனும் இல்லை என்று மனம் உணர்கின்றனர்.
தேவையற்ற வார்த்தைப் பிரயோகம் போட்டி பொறாமைகள், நீ பெரிதா, நான் பெரிதா என்ற காம்ப்ளக்ஸ் பிரச்சினைகள் மற்றும் ஒற்றுமையின்மை இது போன்ற ஒரு குடும்பத்தில் இருக்கும் சிறு சிக்கல்களை இது தீர்க்காமல் விட்டுவிடுகின்றது. பல நல்ல நேர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நெகட்டிவ் என அழைக்கப்படும் எதிர்மறை சிந்தனைகளை அதிகரிப்பதற்காகப் பிக்பாஸ் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர்.
இது போன்ற நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்று சிலேட்டு குச்சி ஒரு பிரேம் உருவாக்கியிருக்கின்றது. அது அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம். அது பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் படிக்கவில்லை என்றால் மன்னித்துவிடுங்கள் நன்றி.