அப்பரின் துன்பம் நீக்கும் சொற்றுணை பதிகம்
சுண்ணாம்புச் கால்வாயில் அப்பர் பெருமான் போடப்பட்ட போது அவர் சிவனை நோக்கி செய்த தவம் அவர் உருவாக்கிய ஆசீர்வதி பாடல் அனைவரையும் இன்றளவும் வழிநடத்திச் செல்கின்றது. பின்பு அவரை கல்லில் கட்டி கடலில் வீசி போதும் அப்பர் பெருமான் கரை நோக்கி வரும்போது பாடிய பதியுங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தொடர்ந்து பாராயணம் செய்து வாருங்கள் நமது வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள், சலிப்புகள், தீராத சிக்கல்கள், சவால்கள் நிம்மதியற்ற நிலை, தற்கொலை எண்ணம் ஆகியவை அனைத்தும் மறைந்து போகும்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
மேலும் படிக்க : பிரச்சனைகள் பனி போல் விலக படியுங்க
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.