சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Big boss7 update: கதை சொன்னது ஒரு குத்தமாயா…. ரவுண்டு கட்டி சரமாரியாக கேள்வி எலிமினேஷன்க்கு ஒரு ஆடு சிக்கிருச்சு

கதை சொல்லி ரவுண்டில் பாவா

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறமாக இருப்பார்கள். இவர்கள் இப்படி என்று நாம் யாரையும் இறுதிச் செய்ய முடியாது. ஏனெனில் மாற்றம் ஒன்று மட்டும்தான் மாறாதது. ஏன் இந்த கருத்து என்று கேட்கிறீர்களா, பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் கதை சொல்லி என்று கதையை ஆளுக்கு ஒருவர் என தங்கள் பக்கம் இருக்கும் கற்பனையை வடிவமைத்து தெளிவுபடுத்தி இருந்தனர். அந்த வகையில் எழுத்தாளர் பாவா பேசிய கதையில் ஒரு சிறிய பகுதியை எடுத்து விளக்கி இருப்பார். அந்த கதையின்படி ஒரு எழுத்தாளர் பெண்ணின் அழகாய் ரசித்திருப்பதை அதன் மூலம் அவர் அந்த பெண்ணிடம் வாங்கிய அறையையும் வெளிப்படையாக
தெரிவித்திருப்பார்.

கருத்தில் போட்டி போடும் போட்டியாளர்கள்

பாலச்சந்திரன் கதை என்று அந்த கதை சொல்லி முடியும் நேரத்தில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சரியான புரிதலும் இல்லை. அதனை எவ்வாறு எடுத்து ஹேண்டில் செய்வது என்பதும் தெரியவில்லை. ஆளுக்கு ஒருவராக தங்களது புரிதல்களை தவறுதலாக செலுத்திக் கொள்கின்றனர்.

இதன் மூலம் ஒரு வெளிப்படையான ஆக்கப்பூர்வமான போக்கு என்பது இங்கு குறைகின்றது. இதனையே விசித்தரா கதை சொல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். அனைவரும் சிறுபிள்ளைகள் எதையும் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவமற்றவர்கள், ஆதலால் அவர்களுக்கு புரியும்படி எந்த ஒரு கதையையும் விளக்கிச் சொல்லுங்கள் என்று விசித்திரா வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றார். இது உண்மையில் சரியான போக்கு இதனை ஒரு சிலர் பிக் பாஸ் வீட்டில் தவறாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதுதான் ஒரு சரியான கணிப்பு என்று கூறலாம்.

மேலும் படிக்க : பிக்பாஸில் அடுத்து என்ன தகவல்கள்

சிங்கரின் நியாயமான பேச்சு

யுகேந்திரர் கதை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம் அதற்காக அவரை விமர்சிக்க கூடாது என்று தெரிவித்திருந்தார். உண்மையில் இது விமர்சனம் இல்லை. கதையின் சாராம்சம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்டுகளுக்கு சரியாக சென்று சேரவில்லை. ஒரு எழுத்தாளர் என்ற ஒரு பொறுப்பில் இருக்கும் போது தெளிவாக போல விளக்கி இருக்க வேண்டியது பாவாவின் பொறுப்பு ஆகும். ஆனால் அவரும் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

பழைய பஞ்சாங்கம் பாடும் பாவா செல்லத்துரை

பொதுவாக எழுத்தாளர்கள் என்பவர்கள் இவ்வுலகில் தனி பிறவியாக நினைத்துக் கொள்கின்றனர். அந்த போக்கு பாவாவிடம் இருக்கிறது. எச்சில் துப்ப வேண்டாம் என்று சொல்லியும் நான் யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பழைய பஞ்சாங்கமாக இருக்கின்றார். பாவா இது ஒருவித சலிப்பை நாளடைவில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்களுக்கு உண்டாக்கும். ஏனெனில் சுத்தம் சோறு போடும் என்ற ஒரு எண்ணம் தான் இங்கு நிற்கும்.மேலும் பாவாவுக்கு இதுவே விரைவில் ஆப்பு வரும் என்பது தெளிவு ஆகும்.

கதையே புரியவில்லை என அனைவரும் கேட்டு இருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால் வனிதா மகள் ஜோதிகா மட்டும்தான் புரியவில்லை என்று கேட்டிருந்தார்.

கதை சொல்லி முடிந்து கருத்தை சொல்லும் போட்டி ஆரம்பம்

ஒரு வழியாக இந்த புரிதல் கதை சொல்லி கடந்து சிக்கன் கிரேவி செய்து மக்கள் சாப்பிட சென்று விட்டனர். பிக் பாஸ் ஹவுஸ் மேட்டுகளுக்கு இடையே அடுத்து போட்டியானது ஆரம்பம் ஆகிவிட்டது.யார் பிரபலமானவர்கள் என்று இருவர் இருவராக பிரிந்து தங்களை விளக்கிச் சொல்ல வேண்டும்.அதில் முதல் போட்டியாளர்களாக விஷ்ணு மற்றும் மாயா படத்தில் இறங்கினர். மாயா விவரமாக சற்று வெள்ளத்தனத்துடன் தனது பிரபலத்தை தம்பட்டம் படித்தார்.

விஷ்ணுவும் தொடக்கத்தை சரியாக செய்து ட்ரிக்கர் ஆகி கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டார். அதனால் மாயா இதில் ஸ்கோர் செய்து விட்டார். இதிலிருந்து ஒரு மாரல் வேல்யூ பாடம் நமக்கு எல்லாம் என்னவென்றால் நமக்கு சரியான திறமைகள் இருந்தும் செய்யக்கூடிய அருகதைகள் இருந்தும் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் நாம் இருக்கும் இடம் தெரியாமல் போகின்றது என்று அடிக்கடி புலம்பி கொண்டிருப்போம். அந்த புலம்பல்களுக்கு எல்லாம் மாயா போன்றவர்கள் ஒரு பாடம். இங்கு நாங்கள் மாயாவை குற்றம் சொல்லவில்லை இறுதியில் அது ஒரு கேம் அந்த இடத்தில் மாயா தெளிவாக விளையாடுகிறார். அதுபோல விஷ்ணுவும் விளையாடி இருக்கலாம் இதையேதான் பூர்ணிமாவும் விளக்கி இருந்தார். இப்படியாக இனி ஒவ்வொருவரும் வெரிஃபைடு வாங்க காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கண்ணீருடன் தான் பேசத் தெரிந்தவர் தான் என்று வனிதா மகள் ஜோதிகாவும் ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்த நாட்களில் இந்த டாஸ்கின் முழுமையும் விடுபடலாம்.

மேலும் படிக்க : Bigboss 7: முதல் நாளே இப்படி முட்டிகிச்சே; பிக்பாஸ் சீசன்7 விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *