பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
‘என் இனிய தமிழ் மக்களே!’ நம் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று. காலம் சென்றாலும் இவரின் கதை எங்கும் செல்லாது. நம் மனதில் என்றும் நிற்கும் வகையில் படத்தை இயக்கியவர் பாரதிராஜா. நம் வாழ்க்கையை கலந்து ஓட்டி கதை களத்தை தயாரித்து இயக்கியவர் பாரதிராஜா.
பாரதிராஜா
17 ஜூலை 1942 சின்னசாமியாக தேனியில் பிறந்தவர். 1977ல் தனது 35வது வயதில் திரையுலகில் தன் பயணத்தை துவங்கி இன்றுவரை வெற்றிகரமாக தொடர்கிறார். வேறு மொழிகளில் துணை இயக்குனராக பணிபுரிந்து தமிழ்மொழியில் ’16 வயதினிலே’ படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார்.
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கிராமங்கள். பெரும்பாலான படங்கள் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டு இருந்த காலத்தில் பாரதிராஜா களமிறங்கி கிராமத்து பின்னணியில் கொடுத்த படம் ’16 வயதினிலே’.
மண் மனம் மக்கள் மொழி என தமிழ்நாடு தமிழ்ப்பற்று தமிழ் மக்களின் அன்பு போன்றவற்றை ஒருங்க கலந்து இணைந்து படங்களை கொடுக்கலானார் பாரதிராஜா. இவர் இயக்கிய படங்கள் பல அதில் அவர் எழுதி இயக்கியவை பல அதில் நடித்தவை சில. திரையுலகில் இயக்குனர் கதாசிரியர் தயாரிப்பாளர் சின்னத்திரை சீரியலின் இயக்குனர் என பல முக படைப்பாளியாக விளங்குபவர் பாரதிராஜா.
திரையில் கை கூப்பிய படி காணொளி தொடங்க ‘என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா’ என்று அவரின் குரல் எழ படத்திற்காக காத்திருக்கும் ரசிகர் கூட்டம் பல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேச்சு பாணி வைத்திருக்க பாரதிராஜாவிடம் ஏன் நீங்கள் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று கூறுகிறீர்கள் என வினவ அவர் கூறும் பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“நான் பெரிதாக கல்லூரிகளில் போய் படித்ததில்லை. புழுதி மண், என் மக்கள், செடிகள், பக்கத்து வீட்டுக் கிழவிகள் என இவற்றைத்தான் படித்தேன். இவ்வளவு பெரிய ஆளாக இன்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் சொந்த மக்கள்தான். இவர்கள் தான் பாசத்துக்குரிய என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘ஒரு கைதியின் டைரி’ மட்டுமே வேறு மாதிரி செய்திருப்பேன். என் மக்கள், என் மொழி, என் இனம் என்றே நான் வாழ்ந்துவிட்டேன். அவர்கள்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லத் தொடங்கினேன்.”
தன்னிலை அறிந்து நன்றியறிந்த வாழும் எல்லா மனிதர்களும் உயரத்தை அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் பாரதிராஜா விளங்குகிறார்.
என் இனிய தமிழ் மக்களே பாரதிராஜாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை பகிருங்கள்.