சினிமாசின்னத்திரைதமிழகம்

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டுகார்டு போட்டவர் யார்????

நமது விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் பல மாதங்களாக இடம்பிடித்து வந்தது நமது பாரதி கண்ணம்மா சீரியல். இது ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியலாக பல நாள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அந்த அளவிற்கு அவர்களை இந்த சீரியலை வெறுக்கும் வெறுப்பாளர்களாக மாறிவிட்டனர்.

ஆம் ,அரைத்த மாவையே அரைத்த கதையாக பல வருடங்களாக ஒரே கதையை போட்டுக் கொண்டிருந்தனர். ஒரு டாக்டராக இருந்து கூட தனது குழந்தை தானா என்று பாரதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைக் கூட சிறிது காலம் சகித்துக் கொண்டனர் மக்கள். ஆனால் அதையே இவ்வளவு வருடங்களாக ஜவ்வாக சீரியலை இழுப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் படிக்க : விஜய சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கேள்வி!

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மவுசு குறைந்தது

இதனால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இப்பொழுது மவுசு குறைந்துவிட்டது. அனைவரும் சீரியல் எப்படா முடிப்பீங்க என்று புலம்பும் அளவிற்கு சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பாக டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் ஆக எதிர்பார்ப்பு தூண்டும் விதமாக சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வழியாக பாரதி இப்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதேசமயம் வெண்பாவோ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார்.

பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா இல்ல வெண்பாவ கல்யாணம் பண்ணுவாரா இன்னும் சீரியலை இப்படியே இழுத்துட்டு போவாங்களா என்று யோசித்த மக்களுக்கு இந்த செய்தியாக பாரதி முதலில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் அனைத்து உண்மையையும் அறிந்த பாரதி

டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் அனைத்து உண்மையையும் அறிந்த பாரதி கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார். கண்ணம்மாவோ தானும் தனது இத்தனை வருட கோபங்களை மறந்து பாரதியை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறார் குடும்பமாக சேர்ந்து அனைவரும் ஒன்றாக வாழ தொடங்கப் போகிறார்கள்.

இந்த சீரியலை இத்துடன் முடிவுக்கு கொண்டு வந்து எண்டு கார்டு போட உள்ளதாக சீரியல் இன் டைரக்டர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க : கலக்கல் கெட்டப்புகளில் ரஜினியின் மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *