புரட்சி விதை பகத்சிங் பிறந்ததினம் இன்று!
இந்திய விடுதலை போராட்ட வீரர்களாக இருந்த வீட்டில் அந்த மாபெரும் இளைஞர் பிறந்தார். நாட்டுப்பற்று மிக்கவர்களாக இருந்ததார். அவர் குடும்பத்தினரும் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். டிஏவியில் படித்த பகத்சிங் தேசத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்தார்.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நாயகர்களில் அவரும் ஒருவர் ஆவார். அவரை பெற்றது நமது பாரத மாதா என்கின்றபோது இதயம் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்கின்றது.
இன்குலாப் ஜிந்தாபாத்
இன்குலாப் ஜிந்தாபாத் என்று நம்மையறியாமலேயே நாம் அந்த மந்திரத்தை உச்சரிக்கிறோம். தேசத்தை வளர்ச்சி அடைய செய்ய இது போன்ற வீரர்கள் தேவையானவர்கள் பகத்சிங்கின் தியாகம் போராட்ட வாழ்க்கை நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் பகத்சிங் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
புரட்சி என்பது தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் இடம் அல்ல, துப்பாக்கிகள்மீதான வழிபாடு அல்ல, புரட்சிக்கு எதிராக இருக்க வேண்டும் – பகத்சிங்
விடுதலையூட்டிய ஜாலியன் வாலாபாக் படுகொலை
13 வயதில் நாடு முழுவதும் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தேச விடுதலைக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆயுதம் ஏந்தி ஆயுத்தம்:
1922 ஆம் ஆண்டு கோரக்பூரில் நடைபெற்ற சௌரி சௌரா நிகழ்ச்சிகள் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். இதனால் ஏமாற்றமடைந்த பகத்சிங் ஆயுதம் ஏந்தி சுதந்திரம் பெற ஆயத்தமானார்.
நவஜவான் பாரத்சபா
1924 ஆம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு சங்கத்தில் இணைந்தார். 1926இல் பகத்சிங் சுகதேவ் நவ ஜவான் பாரத் சபா இளைஞர் அமைப்பை நிறுவினார்.
சைமனே திரும்பி போ
1928-ம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து போராட்டம் நடைபெற்றபோது லாலா லஜபதிராய் தடியடியில் அடிபட்டு இறந்தார். இதற்குப் பழிவாங்கும் விதமாகப் பகத்சிங்கும், ராஜகுருவும் லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாக இருந்த சாண்டர்ஸை கொன்று வெளியேறினர்.
இன்குலாப் ஜிந்தாபாத்
பகத்சிங் வேகத்தைப் பார்த்த பம்மிய ஆங்கில அரசு அவர் மீது ஒரு கண் வைத்துக் கண்காணித்தாது. 1929 சென்ட்ரல் அசெம்பிளி சபையில் ஏப்ரல் 8 ஆம் நாள் குண்டுகள் வீசினார்கள். அப்போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் கைதுசெய்யப்பட்டனர். சென்ட்ரல் பாராளுமன்றத்தில் இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டு சரணடைந்தனர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
இளம் வயதில் ஒரு வீரம் வீழ்த்தப்பட்டது.
நாட்டின் புரட்சி புதையுண்டது