இன்பத்தின் இரகசியம் சிந்தனை துளிகள்- வாழ்வில் வெற்றி நிச்சயம்
சிந்தனை துளிகள் இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது. நீங்கள் விரும்புவதை செய்வதில் அல்ல. நீங்கள் செய்வதை விரும்புவதில் தான் இருக்கின்றன. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய் என்று சொல்வார்கள்.
ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய். எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும் சிந்திக் கிறார்களா அச்சிந்தனையின் வளர்ச்சி கலையாக மாரி கவிஞன் ஆகும் அளவிற்கு கொண்டு செல்லும்.
எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாக கட்டப்படுகிறது.
சோம்பேறித்தனம் உள்ளவர்களுக்கு எல்லாமே கடினமாக இருக்கும். ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாமே எளிதாக இருக்கும். சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்கள் ஆகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே.
தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் என்றால், பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் என்பது அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலனும் கூட. பிறரைப் பாராட்டுங்கள் பாராட்டு கிடைக்கும்.
பிறரை மதியுங்கள் மதிப்பு கிடைக்கும். அன்பு செலுத்துங்கள் அன்பு தேடி வரும். ஒற்றை வழிப்பாதைகள் அல்ல இவை. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை. வாழ்க்கை சுவையானது தான்.
உங்கள் அறியாமையினால் அதை கசப்பாக்கி விட வேண்டாம். உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும். நாணயமாக இருப்பவர்களிடம் எப்போதும் குழந்தைத்தனம் இருக்கும்.
நம் தகுதி பிறருக்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவனாக கருதப்படுகிறான். தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியை தரும். நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விட முடியும்.
ஆனால் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும். இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது. வாழ்வில் முன்னேற உதவும் இந்த சிந்தனை-துளிகள் அவ்வப்போது சிந்திக்க விடுங்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம்.