அழகிய சுற்றுலாத் தலங்களை கொண்ட ராமேஸ்வரம்
பொதுவாக தமிழகத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடமாக கருதுவது ராமேஸ்வரம். முதலில் மதுரை அடுத்து ராமேஸ்வரம் பின்பு கன்னியாகுமரி என சுற்றுலாவுக்கு வருபவர்கள் தங்கள் திட்டத்தை தொடங்குகின்றனர். சுற்றி பல ஆன்மீக தலங்கள் இருக்கின்றன. மதுரையில் இருந்து 161 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளன ராமேஸ்வரம் எனும் அழகிய தீவு. ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளில் பெரும்பான்மையானோர் ராமநாத சுவாமி கோவிலுக்கு வருகை தருவார்கள்.
ராமேஸ்வரம் அழகிய தீவு
இதன் அருகிலேயே பல இடங்கள் காண உள்ளன. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக அறியப்படுகின்றது. ராமன் ராவணனைக் கொன்று அந்த பாவத்தை போக்க ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்டதாக கூறப்படுகின்றன. உலகின் பல நகரங்களில் இருந்தும் இந்தியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் ராமேசுவரத்துக்கு வருகை தர விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த நகரத்தை இந்தியாவுடன் இணைத்து வைத்திருப்பது ஒரு கடற்பாலம்.

ராமேஸ்வரம் உலகப் புகழ் பெற்ற பாம்பன் பாலம்
இந்தியாவின் முதல் கடல் பாலம் என்று அறியப்படும் பாம்பன் பாலம் உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு திருக்கார்த்திகை தீபம், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்த முக்கிய திருவிழாக்கள் ஆக கொண்டாடப்படுகிறது. கிழக்கு மேற்காக பெரிய அளவில் இரு கோபுரங்களை கொண்டது. இந்த கோவில் மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி மற்றும் 1200 தூண்கள் வெளி பிரகாரங்களில் மட்டுமே அமைந்துள்ளன.
ராமேஸ்வரம் கோவில்
நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்ட 865 அடி நீளமும், 657 அடி அகலமும் கொண்ட அழகிய பரப்பளவில் கோவில் அமைந்துள்ளன. ராமேஸ்வரம் செல்பவர்கள் தனுஷ்கோடி தீவு, தனுஷ்கோடி ஆலயம், அக்னி தீர்த்தம், அன்னை இந்திரா காந்தி சாலை, பாலம், ஐந்து தலை அனுமன் கோவில், கந்தமாதன பர்வதம், அரியமான் கடற்கரை என்ற பகுதிகளை பார்வையிடலாம்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி
இறை நம்பிக்கை உடையவர்கள் தனுஷ்கோடி ராமர் கட்டியதாக நம்புகின்றனர். இதுகுறித்த பெரிய சர்ச்சை இன்றளவும் ஓயாமல் இருக்கின்றன. வில்லைப் போன்று வளைந்து இருப்பதால் இந்த ஊருக்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இவ்வூருக்கு வேறு பெயர் இருந்திருக்கக் கூடும் எனும் குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் இணைக்கும் பாலம் ஒன்று கடலுக்கு அடியில் இருப்பதாக நம்பப்படுகின்றன.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் ஒரு தேவாலயம் இருக்கிறது. பல சுற்றுலா பயணிகள் வருகைக்கு உரித்தானது. இவை பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் வந்தாலும் இது யாரு நிரந்தரமாக தங்குவதில்லை. இங்கு வருபவர்கள் சுற்றுலாவுக்காக மட்டுமே வருகின்றனர். 1964 ஆம் ஆண்டு வந்த புயல் ஒன்று தனுஷ்கோடியை புரட்டிப் போட்டது. இதிலிருந்து இந்த நகரம் கைவிடப்பட்டதாக உள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
அக்னி தீர்த்தம் என்பது ராமநாத சுவாமி கோவிலின் அருகே அமைந்துள்ள கடற்கரை பகுதியை இந்த அக்னி தீர்த்தம் ஆகும். பக்தர்களும் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வதற்கு முன் இந்த தீர்த்தத்தில் மூழ்கி குளித்து விட்டுதான் ராமநாத சுவாமி தரிசனம் செய்ய செல்வார்கள். அந்த அளவுக்கு இந்த தீர்த்தம் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகின்றன. இந்த அக்னி தீர்த்தத்தில் குளித்து விட்டு தான் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்றதாக பலத்த நம்பிக்கை நிலவுகின்றன.
ராமநாத சுவாமி கோவிலின் அருகே அமைந்துள்ள கடற்கரை பகுதி அக்னி தீர்த்தம். ராமேஸ்வரத்தில் மொத்தம் 64 தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது இந்த தீர்த்தம். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடம் இதுவேயாகும். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி ஒரு செயலை தொடங்குபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் தீராத நம்பிக்கை.
ராமேஸ்வரத்தில் ஐந்து முக ஆஞ்சநேயர்
ராமன் லட்சுமணன் சீதை மற்றும் அனுமன் ஆகியோரது உருவ சிலைகளும் அமைந்த மற்றும் சிதைவடைந்து திரும்ப கட்டப்பட்ட ஒரு கோவில் ஐந்து முக ஆஞ்சநேயர் கோவில். அனுமன் ஐந்து முகத்தோடு காட்சி தந்ததாக நம்பப்படுகிறது. கோவிலுக்கு உள் சென்றவர்களுக்கு ஒரு வினோத உணர்வு ஏற்படும் என்று பக்தர்கள் நம்பிக்கை இருந்தாலும், அனைவருக்கும் இது போன்ற உணர்வு ஏற்படுவது இல்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டது. அன்னை இந்திரா காந்தி கடல் பாலம் இது தான். பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகின்றது. தென்னிந்தியாவின் மிக நீளமான பாலம் இந்த அன்னை இந்திரா காந்தி கடல் பாலம்.
ராமேஸ்வரத்தில் ஆன்மீக ரீதியில்
ராமேஸ்வரத்தில் நீரில் மிதக்கும் பாறைகளை காணமுடியும். இயற்பியல், வேதியல் காரணங்களால் இது நிகழ்கிறது. சிலர் தெய்வ சக்தி என்று நம்புகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை அறிவியல் என்று கூறுகின்றனர். ஆனால் இதை வைத்து சிலர் காசு சம்பாதிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர். வழக்கம் போல அதிசயம் என எண்ணி இதை காண கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தருகின்றனர்.
கந்தமதன பர்வதம் அனுமன் உயிருடன் வாழ்வதாக பல கருத்துகள் நிலவுகின்றன. ராமரின் பாதங்கள் பதிந்து இருப்பதாகவும் இங்கு மக்கள் பார்வையிட வந்து செல்கின்றனர். இதனால் திருமணம் நடக்கும் என்பதும், திருமண வாழ்க்கை இனிக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இந்த இடம் மிக பழமையானதாகவும் ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளன. இந்த இடத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

ராமேஸ்வரம் முக்கியத்துவம்
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வங்கக் கடலில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரம் தீவு வரலாற்று முக்கியத்துவம் மட்டுமல்லாது. ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. ராமேஸ்வரம் அழகிய கடற்கரைகள் சூழ்ந்த ஒரு சிறப்புமிக்க தீவு. ராமேஸ்வரம் தமிழகத்தின் மிக முக்கிய ஒரு சுற்றுலா பகுதி ராமேஸ்வரம்.
ஈஸ்வரனுக்கு இந்த பகுதியில் ஒரு கோவில் கட்டி உள்ளதாக நம்பப்படுகின்றன. ராமாயணத்தில் இந்த இடத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்துள்ளதாக அறியப்படுகிறது. ஸ்ரீராம ராம ராமேஸ்வரத்தின் சிறப்புகள் அறிந்த நீங்களும் சென்று பயனடையுங்கள்.