சீக்கிரம் கர்ப்பம் ஆக வேண்டுமா? கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவு என்ன?
குழந்தை பாக்கியம் என்பது பெற்றோர்களுக்கு ஒரு பொக்கிஷமாக அமைகிறது. தங்களுக்கு என்று ஒரு குழந்தை வரும் போது தான் தங்கள் குடும்பம், தங்கள் வாழ்க்கை என பொறுப்பும் பாசமும் அன்பும் அதிகரிக்கிறது. அந்த காலத்தில் எல்லாம் நமது மூதாதையர்கள் 10 ,15 என குழந்தைகளை அசால்டாக பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது என்பதே மிகப்பெரிய ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய காரணமாகும். இப்பொழுது உள்ள Fastfood உணவால் நிறைய பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது. அதை எல்லாம் தவிர்க்க ஒரு சிறந்த ஆரோக்கியமான உணவை இப்போது பார்க்கலாம் உணவு என்று சொல்வதை விட உங்களுக்கு ஒரு சத்தான பானம் என்று கூட கூறலாம்.
உளுந்தங்கஞ்சி செய்முறை
முதலில் ஒரு கடாயில் உங்களுக்கு தேவையான அளவு கருப்பு உளுந்து எடுத்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் நிலக்கடலை, சிவப்பு கவுனி அரிசி ஆகியவை உளுந்தில் பாதி அளவு சேர்த்து இரண்டையும் அதேபோல் 5 நிமிடம் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு உங்களுக்கு விருப்பம் இருந்தால் பாதாம், முந்திரி ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம் இல்லையேல் உளுந்து, சிவப்பு கவுனி அரிசி, நிலக்கடலை மட்டும் சேர்த்து கொள்ளலாம். வறுத்து வைத்த அனைத்து பொருட்களும் சிறிது நேரம் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும் இந்த பொடியை நீங்கள் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் எவ்வளவு மாதங்கள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்த பின்பு அதில் நாம் முன்பு அரைத்து வைத்த உளுந்தங்கஞ்சி பொடியை இரண்டு டீஸ்பூன் அளவு சேர்த்து கெட்டியாகும் வரை தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். கஞ்சியை நன்றாக கலக்கவில்லை என்றால் அது கட்டியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. எனவே நன்றாக கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். கஞ்சி நன்கு கெட்டியாகிய பின்பு அதில் நாட்டு சர்க்கரை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் தேங்காய் துருவல் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம் இது உங்கள் விருப்பமே. அவ்வளவுதான் சூடான மிகவும் ஆரோக்கியமான உளுந்து கஞ்சி ரெடி.
மேலும் படிக்க : கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்வது மன சோர்வு தன்னம்பிக்கை அதிகரிக்க உதவும்
இதை நீங்கள் தினமும் எடுத்து வர இடுப்பு வலி கழுத்து வலி மாதவிடாய் பிரச்சனை ஆகியவை முற்றிலும் நீங்கும் முக்கியமாக பெண்கள் விரைவில் கருத்தரிக்க இது ஒரு முக்கிய உணவாக அமையும் குழந்தையை நினைத்து கவலையில் வாடுபவர்கள் இதனை தினமும் குடித்து வர உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.