புதினா கேழ்வரகு பக்கோடா
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகை உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் செரிமான உறுப்புகளில் நலத்தை மேம்படுத்த முடியும்.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும். நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறுவதற்கு சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும்.
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை, கேழ்வரகு பக்கோடா, கேழ்வரகு அடை, இப்படி வித்தியாசமாக சமைத்து கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலுக்கு சக்தி அதிகம் தேவைப்படுவதால் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். கால்சியம் சக்து உடலின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி தன்மைக்கு அவசியமானதாக கருதப்படுகிறது.
கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகின்றன. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவதால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித் தன்மை அதிகரிக்கின்றன.
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத் தன்மை அதிகம் இருப்பதால் சிலருக்கு பதற்றம், மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன.
நரம்புகளை வலுப்படுத்தும் சத்துக்கள் கேழ்வரகு அதிகம் காணப்படுகிறது. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மனநலம் மேம்படுகிறது. கேழ்வரகு பக்கோடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
கேழ்வரகு புதினா பக்கோடா
தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய புதினா ஒரு கப், கேழ்வரகு மாவு இரண்டு கப், கடலை மாவு மூன்று ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப, கறிவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது, மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன், தண்ணீர் சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, நறுக்கிய புதினா, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பக்கோடா, டேஸ்டான புதினா கேழ்வரகு பக்கோடா தயார்.