Panguni utthiram 2024 : பங்குனி உத்திரம் 2024 சிறப்புகள் மற்றும் பயன்கள்
பங்குனி உத்திரம் 2024
2024 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25 தேதி பங்குனி மாதம் 12 இல் உலகம் முழுவதும் முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் வகையில் வருகிறது.பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமானது நடத்தப்படுகின்றது. முருகன் குடி கொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் சிறப்பாக பங்குனி உத்திரமானது கொண்டாடப்படுகின்றது.

பழனி மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் விசேஷமாக இன்று இருக்கும் மேலும் மாநிலத்தில் உள்ள முருகன் கோவில்கள் எல்லாம் சிறப்பு வழிபாடுகள் பாலபிஷேகம் பால்குடம் எடுப்பது போன்றவை பிரசித்தி பெற்றது. இன்று திருமணத்திற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது இந்நாளில் அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடைபெற்றது ஆகையால். சிவபெருமான் மற்றும் முருகன் தளங்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பங்குனி உத்திரம் வழிபாட்டு முறைகள்
பங்குனி உத்திர நாளில் திருமண வைபோகம் நடைபெறும். திருமணம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டால் அடுத்த வருடத்தில் பங்குனி உத்திரத்திற்குள் திருமணம் நடைபெறும் என்பதை ஐதீகம். இதனை பின்பற்றி வேண்டுதலை முன் வைக்கலாம் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இந்நாளில் வழிபாடு நடத்தலாம்.
காலை குளித்து முடித்து பூஜை செய்து முருகன் படத்திற்கு பூசாற்றி பால் அதனுடன் கரும்பு சர்க்கரை கலந்து நெய்வேத்தியம் வைத்து வழிபாடு நடத்தி வேண்டுதல் வைத்து வழிபடலாம்.

விரதம் இருப்பவர்கள் இன்று விரதம் இருந்து முருகன் கோவிலில் வழிபாடு நடத்தி வரலாம்.
பங்குனி உத்திரம் பௌர்ணமி இரண்டும் இன்று கலந்திருப்பதால் இது சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகின்றது இன்று வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும் அமைந்திருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகின்றது முருகன் கோவில் சிவாலயங்களுக்கு முடிந்தவரை சென்று வரவும்.