ஆன்மிகம்

ஆடி அம்மாவாசையில் முன்னோர்களை வழிபடும் முறைகள்!,,

ஆடி_அமாவாசையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற  சம்பிராதாயங்களின் தொகுப்பினை  இங்கு கொடுத்துள்ளோம். இவை முழுக்க  நமது பெரியோர்களான முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு முறையான வழிபாடுகள் இருக்கும். இருப்பினும் அவற்றில் பொதுவான வழிபாட்டு முறையினை இங்கு கொடுத்துள்ளோம்.

 ஆடி ஆமாவாசை விரதம் இருக்கும் முறை:

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இல்லையெனில் வீட்டில் நாம் குழிக்கும் தண்ணீரை மக்கில் எடுத்து ஓம் என 21 முறை சொல்லி, மூச்சில் கவனம் செலுத்தி சொல்லி நீரீனை ஊற்றும் பொழுது அது கங்கைக்கு நிகரானதாக மாற்றம் பெற்று கங்கையில் குளித்த வாய்ப்பு பெறலாம். 

அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல், இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும். ஆனால் ஒரு சில ஆன்மீகப் பெரியோர்கள் பெண்கள்  கட்டாயம் சாப்பிட வேண்டும் என்றும்,  சாப்பிட்டுவிட்டுத்தான் முன்னோர்களுக்கு சமைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஆடி அமாவாசையில் தர்பணம் செய்யும் ஆண்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும்.  காலை விரதம் இருந்து மதியம் சாப்பிடலாம்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்களை படைத்து துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும்.

காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.

விருந்து உபசாரம் கொடுத்து தர்பணம் செய்ய இயலாதவர்கள்  தண்ணீர் எல்லினை படைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யலாம். குலதெய்வ வழிபாடுகள்  சிறந்தது. அம்பிகையை வழிபடலாம்.  மேலும்  அகத்தி கீரையை  பசு மாடுகளுக்கு கொடுக்கலாம் இதுவும் முன்னோர்களின் ஆசிர்வாதம் பெறும் முறைகளில் ஒன்றாகும்.

ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி  அமாவாசையில் பக்தர்கள் அருள் பல பெற்று வாழ் வாங்கு வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *