ஆன்மிகம்ஆலோசனை

Prathosam : பிரதோஷத்தின் வகைகளும் அதன் பயன்களும்

திரயோதேசி திதி என்பது சிவபெருமானுக்கு உரிய திதியாகும். பொதுவாக ஒரு மாதத்தில் வரும் சிவராத்திரியும் , திரயோதசி திதியும் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த தினங்களாகும். திரயோதசி திதியில் வரும் தினமே பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. சனி பிரதோஷம் ,வெள்ளி பிரதோஷம் ,சோமவார பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், புதன் பிரதோஷம் என பிரதோஷத்தில் பல வகைகள் உண்டு.

ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் ஒவ்வொரு பயன்கள் இருக்கும். இந்த பதிவில் ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்திற்கும் என்ன பலன் யாரெல்லாம் எந்த பிரதோஷத்தில் விரதம் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஞாயிறு பிரதோஷம்

நீண்ட நாள் திருமண தடை விலகி விரைவில் திருமண யோகம் கைகூடும். திருமணம் ஆன தம்பதிகள் ஞாயிறு பிரதோஷ விரதம் இருப்பதால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை , அன்பு அதிகரிக்கும்.

திங்கள் பிரதோஷம்

சோமவார பிரதோஷம் என்பது நமது வாழ்க்கைக்கு தேவையான தெளிவை கொடுக்கும். மனதில் இருந்து வந்த பயம் விலகி எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் செய்வதற்கான மன தைரியத்தை கொடுக்கும். புத்துணர்ச்சியுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள்.

செவ்வாய் பிரதோஷம்

பொன் பொருள் வாங்குவதற்கான யோகம் வரும். வீட்டுமனை வாங்க நினைத்தவர்கள் வீடு கட்ட ஆசைப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். நிலம் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் உண்டாகும்.

புதன் பிரதோஷம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லும் வழக்கம் உண்டு. புதன் பிரதோஷத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். மேலும் 16 வகையான செல்வங்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

வியாழன் பிரதோஷம்

தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் முன்னோர் சாபம் விலகி முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் குடும்பத்தில் நிம்மதி, அமைதியான சூழல் நிலவும்.

வெள்ளி பிரதோஷம்

வெள்ளி பிரதோஷத்தன்று சிவா ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் தீராத கடன்களும் தீரும். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். சுப காரியங்கள் தொடர்ந்து நடைபெறும்.

சனி பிரதோஷம்

சனி பரதோஷத்தில் விரதம் இருந்து சிவபெருமானுக்கு வில்வமாலை சார்த்தி அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பகை விலகும் மேலும் கல்வியில் சிறந்து விளங்க ஞானம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *