ஆரோக்கியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

ஆரோக்கியத்திற்கு பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள்

ஆரோக்கியத்திற்கு தேவையான பயனுள்ள 12 வீட்டு வைத்திய குறிப்புகள். காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெறும். வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனை கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும். சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வருவதால் விரைவில் குறைய ஆரம்பிக்கும். கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

அரிசி உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலையில் முழுதாக வளர்ந்த பத்து கருவேப்பிலைகளை சாப்பிட்டு வருவதால் 34 மாதங்களில் உடல் பருமனில் மாற்றம் காணலாம்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வருவதால் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து இதை சாப்பிட உடல் எடை குறையும். கால் ஸ்பூன் மிளகுத் தூள், 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை தண்ணீர், ஒரு ஸ்பூன் தேன் இக்கலவையை நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

உணவுக்கு பிறகு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *